பக்கம்:இதயகீதம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 இதய கீதம் மேகக் கூட்டத்தின் மின்னொளி, காட்டகத்தே காணப் பெறும் களவியல் செய்திகள், நாட்டகத்தே நடை பெறும் நற்போர்க்குறிப்புகள், வேந்தரின் வேழப்படை, விளையாடு மாதரின் தத்தைப்பேச்சு, தலைவணங்காத் தமி ழரின் வீர மூச்சு—இலக்கியங்களாக அமைந்த காலம் போய் இறைவன் அந்தாதியும். இராம காதையும், பக்தாமிர்தமும், பாரதக் கதையும், திருவிளையாடற் புராணமும் எழும்பலாயின. கம்பரும் கிழாரும் போன்ற பக்த சிகாமணிகள் பல்லுருவில் நடமாடலாயினர்! இயற் கையைப் பாடியவன் ‘இறைவா, என் அப்பா-உன் முக்திபெற என்னம்மா செய்வேன்?' என்று அம்மையும் அப்பனும் நீயே எனப் பாடத் துவங்கினான். மூதின் முல்லை, வீரத் தாய்மார், நடுகல் நாட்டிய நற்குடி மக்கள்,சேரன் மாட்சி, சோழ மண்டபக் காட்சி, பாண்டியன் படைப்பலம் குறித்து முழங்கப்பட்ட இசை -விசையொடிந்தது ! இயற்கை வர்ணனைகள், குன்றத் தின் கோலம், நிலாவின் அழகு, அன்னத்தைத் தூதனுப் பும் காதலன் கதை குறித்து யாழொடு வீணை கலந்து இசைத்த வாணர்கள் மறைந்துபோய், மதியைச் சூறை யாடும் விதியைக் குறித்து, ஏழேழ் பிறப்பைப்பற்றி பஜனை செய்யும் பரமார்த்தீக சிஷ்யர்கள் கிளம்பினர் ! விளைவு- இசைத்தமிழ் இன்று கோயில் கோபுரத்தைப் பற்றி, கோபாலன் கோபியருடன் குலவிய வகைகளைப் பற்றி, அனுமானின் ஆழ்வார் திருப்பெருமைபற்றி மாறி விட்டது. மகனைத்தேடி அவன் வீர மரணமடைந்தான் என்பதைக் கேட்டு மகிழ்ந்த தாயின் மாட்சி குறித்து k

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/13&oldid=1740310" இலிருந்து மீள்விக்கப்பட்டது