8 இதய கீதம் தமிழின் கதி இந்த உருவுக்குத் தேய்ந்து விட்டது . தேயும்படி செய்யப்பட்டது. இது தமிழராய்ச்சியி வீடுபட்டிருந்த திரு. மு. ராகவைய்யங்காருக்கு, 'காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு: ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் ஆஞ்ஞையிட்டருளிய ஸ்ரீ முகம்' இது !!! தமிழின் தனிப்பெருமை மறையச் செய்ய 'திரை மறைவில் திட்டமிட்டு வேலைகள் நடைபெற்றன = வந்தவர்க்கெல்லாம் வாரி ஈந்ததால் தமிழன் தங்கிலை கெட்டான். தன்னை உணரத் தவறினான்-திராவிட மொழியின் சிறப்பினை மறந்தான். தன்னையே பாம்பு விழுங்குமளவு நெடுந்துயில் கொண்டுவிட்டான்! இயலும், இசையும், கூத்தும்- எல்லாம் அவனை வீட்டுப் போய்க் கொண்டிருந்தன. எவரும் அவைகளை கவனிக்கவில்லை. முத்தமிழ் உருமாறியது. ஊதாரிக் கொள்கைகளால் பாவபுண்ணியம் என்ற பேச்சும், பக்தி மார்க்கம் என்ற வழியும், மோட்ச நரகம் என்ற மோசப் பாதை முதலிய தந்திர சாகசத்தால்! கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கீர்த்தியும் செல்வமும் பெற்றுத்திகழ்ந்தது தென்னாடு. தமிழ் நாட்டின் சார்பில் அரசியல் தூது வன் ஒருவன், ரோம் நாட்டு மாவீரன் அகஸ்டஸ் சீசருடைய ஆட்சி மன்றத்தில் அமர்ந்திருந்தானாம், கட்டுக்கதையல்ல ; ரோம்காட்டு சரித்திரம் கூறுகிறது. இந்தத் தகவலை ! எகிப்தியர், பாரசீகர், பினீஷியர்
பக்கம்:இதயகீதம்.pdf/15
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை