பக்கம்:இதயகீதம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 இதய கீதம் என்ற மலர் வீழ, புதுமையென்ற அரும்புகள் இதழ் விரித்தன! காலத் தூதுவன், தனது நற்செய்திகளை ஆங்காங்கு தூவினான். பகுத்தறிவு பரவியது ஏன்? எப்படி? எதற்காக?-என்ற கேள்விக் குறிகள், கிளம் பின. அந்தக் கேள்விக் குறிகள், அந்தந்த நாட்டின் மக்கள் வாழ்வில் மகத்தான மாறுதல்களை உண்டாக்கின. விஞ்ஞானம் விளையாட, அஞ்ஞானம் விலக, ஆராய்ச்சி பெருக ஒரு புது நிலை உதயமாயிற்று. இத்தகைய புது வாழ்வுக் காட்சி தான் இன்று தென்னாட்டில் நிலவுவது. திசை கெட்டுப் போனோம், தேன் மொழி சிதைந்து சீரழியக் கண்டோம், மாட மாளிகைகளிருந்த இடங்களிலே மண்மேடுகள் ! கூட கோபுரங்கள் கோட்டான்கள் உலவும் இடமாகிவிட்டன? வாழ்ந்த பாம்பரையின் வீரத்தையும் பெருமையையும் சாற்ற,அதோ,இடிந்துபோன கோட்டை கொத்தளங் கள்-மடிந்த மாட்சியின் காட்சிகளாக நிற்கின்றன! என்று நினைத்தான்-இன்றுள்ள நிலையைக் குறித்து எண்ணினான் - சோகம் பறந்தது, வீரம் பிறந்தது. முடிவு - இன்று தென்னாடு மறுமலர்ச்சிச் சோலை யாக மாறி வருகிறது. தமிழ் எங்கள் தாய் ! தமிழ் எங்கள் பேச்சு! என்ற சங்கொலி முழங்கிக்கொண்டே இருக்கிறது. தாய் மொழி என்றதும் இதயத்திலே ஒரு குளுகுளுப்பு. தேயும் நிலையிலிருந்து தாய் மொழியைக் காக்கவேண்டும் என்ற வீராவேசம், வேலி போட்டு வீணர்களின் தந்திரங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/19&oldid=1740316" இலிருந்து மீள்விக்கப்பட்டது