பக்கம்:இதயகீதம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி வாரிப் பிரிவினை 19 தனியாட்சியின் தன்மையையும், அது எப்படியிருக் கும் என்பதையும் நாம் எடுத்துச் சொல்லியே வருகிறோம். திராவிட நாடு திராவிடருக்கு ஆகவேண்டு மென நாம் கேட்கிறோமென்றால், அதன் பொருள் வட வருடன் வம்புக்கு போகிறோமென்றோ, வெறியைக் கிளப்பி அதன்மீது வாழ நினைக்கிறோமென்றோ அர்த்த மல்ல. வடநாட்டுக்கு இங்கு வசூலாகும் பணத்தை வரியாகக் கட்டிவிட்டு வாடியுழலும் கடன்காரன் போலக் கைகட்டிக்கொண்டு நிற்கும் நிலைமையைப் போக்கி, இங்கு வழியும் இயற்கை வளங்களைக் கொண்டு மக்கள் உழைப்பையும் விஞ்ஞானத்தையும் மூலதன மாகக் கொண்டு வாழ்வது என்பதே பொருள். திரா விடத்தின் அரசிலே, அவர்கள் வாழ்விலே, பொருளியல் வளத்திலே, மாருடைய தலையீடும் மேற்பார்வையும் கூடாதென்பதோநம் இலட்சியத்தின் 'இருதய' கீதம்! இன்றோ, எதற்கெடுத்தாலும் நாம், மத்திய சர்க்காரை நோக்கிப் பிச்சை கேட்கும் பரிதாப நிலையில் கிடக்கிறோம். இந்நிலை நீங்கி, நாம் வாழவேண்டுமென்பதே நம் ஆசை. பகை கிளப்பவோ, வெறுத்து வாழவோ அல்ல நம்முடைய கோரிக்கை. தற்போது வடவருக்கும் நமக் கும் நீடிக்கும் போலி நேசம், வற்புறுத்தல்மேல் வாழும் நிலை நீங்கட்டும். நாமும், அவர்களும் 'நண்பர்களாக வாழ்வோம் என்பதே நம்முடைய விருப்பமும், வேண்டு தலுமாகும். இதைப் பன்முறை கூறிவிட்டோம் இன்றும் கூறுகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/26&oldid=1740323" இலிருந்து மீள்விக்கப்பட்டது