20 . இதய கீதம் திராவிட நாடு தனித்தியங்கும் என்றால், இந்திய பூபாகத்துடன் வெட்டொன்று துண்டிரண்டாக' ஆகி, அப்படியே அரபிக்கடலுக்கும் வங்காளாகுடாக்கடலுக்கு மிடையே ஒரு அகலக் கால்வாய் வெட்டி, பிரிந்துபோய் நிற்பதல்ல. நமக்கென ஒரு நாடு அமைத்துக்கொள்ள வேண்டுமென்பதுதான். வெளி நாட்டாரின் ஆபத்து இந்திய பூபாகத்துக்கு ஏற்பட்டால், தனித்துப் பிரிந்த திராவிடம், தனியாக நின்றுவிடாது. ஆபத்து ஏற்பட்டு, தாக்குதல் விளைந்தால் அருகில் ‘இந்துஸ்தான்' இருக் கிறதே, அதற்குத்தானே ஆபத்து என்று 'திராவிடம் ' சும்மா இருக்காது,ஒன்றுநின்று, கைகோர்த்து வெளிப் பகையை ஒட்டும். நாட்டைப் பிரித்துக்கொண்டால், தொடர்பு எல்லாவற்றையும் துண்டித்துக்கொண்டு போய்விடாது என்பதையும் விளக்கி வருகிறோம். நேசம் நிலைக்கவும், வளரவும், அதற்கான ஒப்பந்தம் செய்து கொள்வோம், பிரிந்து நின்று, வாழ்வோம் என்று கூறு கிறோம். நட்பு நிலவட்டும், நாச நினைப்பு ஒழியட்டும், இரண்டு குடும்பங்களாக வாழ்வோம், ஒரே குடும்பமாக இருந்துகொண்டு, இரண்டு 'வேறு இனங்கள் உறுமிக் கொண்டும் வேதனையி லீடுபட்டுக் கொண்டும் போக வேண்டாம், இதற்கு ஒரு முடிவு ஏற்படட்டும் என்று கூறி வருகிறோம்.
தனிநாடு வேண்டுமென நாம் கருதுவதில், கோரு வதில், அரசியல், அறிவியல், பொருளியல், துறைகளில் பிற்போக்கில் கிடந்து உழல்கிறோம் என்பதுமட்டுமல்ல,