பக்கம்:இதயகீதம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி வாரிப் பிரிவினை 21 பழம்பெருமையும், இருக்கிறது. எப்போதும் நாம். இன்று இருப்பது போல ஒரு பரந்த உபகண்டத்துடன் இணைந்து, அல்லலில் அகப்பட்டு வாடியவர்களல்ல. முன்பு, ஒரு தனி நாடாகவே இருந்தோம் - வாழ்ந் தோம்! வெள்ளையர் இட்ட தீ நம்மீது பரவுமுன், இங்கு எந்த வட நாட்டு ஆதிபத்திய அரசும் நம்மை அடிமைப் படுத்தியதில்லை! குப்தர்கள் ஆட்சியில் தானாகட்டும். மௌரிய சாம்ராஜ்யத்தில்தானாகட்டும், மொகலாய அரசில் தானாகட்டும், இவை எவையும் திராவிடத்தின் தன்னாட்சியைத் தகர்த்ததில்லை; கேடு சூழ்ந்ததில்லை, அதற்குப் பதில் இமயமீது நமது சேரன் 'விற்கொடி நாட்டினான், சோழ மன்னன் பர்மாவில் பவனிவந்தான், கரிகாலன், சிங்கப்பூர்வரை சென்றான்,என்றெல்லாம் நமது இலக்கியங்கள் நம் புகழைக் கூறுகின்றன. இத் தகைய வீரமும் தீரமும் விளையாண்ட இடம் நமது நாடு! இடிந்துபோன கோட்டை கொத்தளங்கள் இதோ, நம் கண்முன்னர், மடிந்துபோன மன்னாதி மன்னர்களின் வீரதீரத்தைப் பாடம் சொல்லிக்கொடுக்கின்றன! தரணி யாண்ட தண்டமிழ் மகனே, ஏன் இன்று இக்கதிக்கு ஆளானாய், என்று நம் பண்டைப் பெருமை, நம்மைப் பரிகசிக்கிறது ! இதயத்தைக் குலுக்கிவிடுகிறது! அதுமட்டுமல்ல, இழிநிலையில் கிடக்கும் நம் கண் முன்னே, இன்று உலக நாடுகள் ஓடிவருகின்றன. அவை களைக் காணும்பொழுது, நம் ஆவல் பன்மடங்காகிறது. ஸ்பெயின் போர்ச்சுகல்! அயர்லாந்து-அதற்குள்ளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/28&oldid=1740325" இலிருந்து மீள்விக்கப்பட்டது