22 இதய கீதம் ஒரு தனியரசு ! ஸ்வீடன், நார்வே ! சிறு நாடு இத்தாலி! துருக்கி- பழைய உதுமானிய சாம்ராஜ்யத்தின் துண்டு. இன்று அது தனி நாடு ! இவைகளைக் காணும்பொழுது வாழ்விழந்துகிடக் கும் நமக்கு ஆசை ஏன் தோன்றாது; வாழ வசதியிருந் தும் அதை மாற்றானுக்கு அளித்துவிட்டு மண்டியிட்டுப் பிச்சைக் கேட்கும் நிலை நீடித்தால் இதயம் ஏன் குமுறாது! திராவிட நாடு திராவிடருக்காக வேண்டும், என்ற உரிமை முழக்கம் தனக்குப் பிடிக்காது என்கிறார் பட் டாபி! தனி மாகாணம் என்று கூறிக்கொண்டு, வடவர் பிடியில் அடங்கிக் கிடப்பதைத்தான் விரும்புவாரா அவர்! சர்க்கரை வேண்டுமா என்று கேட்டானாம், ஒருவன்,சர்க்கரைக்கு திண்டாடித் தெருவில் நிற்பவனை 'ஆமாம், எங்கே' என்றானாம் கேட்டவன் 'இந்தா, இக் காகிதத்தில் எழுத்தாக இருக்கிறது எடுத்துக்கொள்' என்று கூறினானாம் எத்தன்! அதைப்போல இருக்கிறது, பிரிவினை என்பது உண்டு, ஆனால் 'பிரிந்து வாழ்வது கிடையாது என்ற கூற்று! அவருக்குப் பிடிக்காததுதான் தனி நாடாக நாம் ஆகவேண்டுமென்பது- இப்போது. ஆனால், உரிமைச் சிளர்ச்சி ஒரு உதட்டுச் சொல் அல்லவே! அதிலும் நம் உரிமை முரசு, நம் இதயத்திலிருந்து எழும் பும் இலட்சிய கீதம் ! இது, சீறியெழும் புயல்! இதைத் தடுக்க நினைக்கலாம்-ஆனால் முடியாது!
பக்கம்:இதயகீதம்.pdf/29
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை