இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புது அரசியல் ஜனவரி 26- இந்தியப் புது அரசியல் ஆரம்பமாகி விட்டது. சர்க்கார் கட்டிடங்களில், பொது இடங்களில், தீபாலங்காரமும், அரசாங்க ஆடம்பரமும் அன்று நடை பெற்றுள்ளன -ஆனால், மக்கள் மன்றத்திலே மகிழ்ச்சி யில்லை ! 'குடியரசு' ஆரம்பமாகிவிட்டது என்ற எண் ணங்கூட இல்லை, அது பற்றிய சிறப்புப் பேச்சுகள் இல்லை, 1947 ஆகஸ்டு 15 அன்று இருந்த சிறிதளவு உணர்வு கூட இல்லை ! இந்நாட்டிலுள்ள எல்லா அரசி யல் கட்சிகளும், இந்த அரசியலமைப்பு மீது. அதிருப்தி யைத் தெரிவித்துள்ளன-ஒரு கட்சியாவது இத்திட்டத் தை ஏற்கவில்லை ! காரணம், புது அரசியலமைப்பு, ஒரு முதலாளித் துவச் சிருஷ்டி, பிற்போக்கின் படைப்பு, வடநாட்டு ஆதிக்கத்தின் சுரண்டல் இயந்திரம், டெல்லிக்கு மணி முடி சூட்டும் திட்டம் ! மகாணங்களின் உரிமைகள், வருமான இனங்கள், வளம்பெறும் வழிகள், சுதந்திர நிலை கொள்ளைபோய் விட்டன.