பக்கம்:இதயகீதம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இதய கீதம் நமது கையிலே இருந்த மாடப்புறா, பருந்தால் விரட்டப்பட்டு விட்டது: சுதந்திர உரிமைகள், பறி போய் விட்டன். புறா கோபுரக் கோடியில் ; கீழே நாம்! அண்ணாந்து பார்க்கிறோம், அருமைப் புறா பறிபோய் விட்டதே என்ற துயரம் தோய்ந்த முகத்துடன். வானமளாவி நிற்கும் கோபுரம், ஏறமுடியாததாகத் தெரிகிறது. ஏக்கமும் இதய வேதனையும் நமக்கு ஏற்படுகிறது. புதிய அரசியலமைப்பை எண்ணிப் பார்க்கையில் ஆகாயமளாவி நிற்கும் கோபுரந்தான் நினைவுக்கு வரு கிறது. புறா கோபுரத்தில், கீழே நாம்! எனினும் நமது புறாவை நாம் பெற்றுத்தான் ஆகவேண்டும், பெறாமல் முடியாது. மாடப்புறாவைப் பெற, கோபுரத்தின் மீது ஏறவேண்டும். ஏறவோ, நம்மால் இயலாது, ஏனெனில் கால்கள் இரண்டும் கட்டப்பட்டிருக்கின்றன சட்டம் என்ற கயற்றால்! எனினும் நாம் ஏறி, நமது புறாவைத் திரும்பப் பெறத்தான் வேண்டும். 'எடுத்தடி வைக்க இயலாதபோது அதற்கான வழி வகைகள் இல்லாத போது, ஏறிச்செல்லும் வாயிலும் சாத்தியிருக்கும்போது எப்படி ஏறமுடியும் என்ற சஞ்சலமும் சந்தேகமும் எழும்புகின்றன ! உண்மை-எனினும் நாம் நமது இலட்சியத்தைப் பெற்றுத்தான் தீரவேண்டும்-இதில் எந்தவித இன்னல் எதிர்நோக்கினும், அவைகளைத் தாங்கி, தாண்டிச் செல்லவேண்டும். கோபுரத்தின் படிக்கட்டு களில் ஏறி,நடக்கமுடியாவிட்டால் மார்புகளால் ஊர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/31&oldid=1740328" இலிருந்து மீள்விக்கப்பட்டது