பக்கம்:இதயகீதம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது அரசியல் 29 நிர்ணய சபையும் ஏற்பட்டது. அந்த அரசியல் நிர்ணய சபை இந்தியாவின் அரசியலைத்தயார் செய்து தந்துள் ளது. இந்த ஏற்பாடு நடைபெற்ற காலத்தில், பிரிட்டிஷ் காங்கிரஸ் பேச்சு வார்த்தைகள் நடந்த வேளையின் முடிவாக, அதிகார மாற்றம் ஏற்பட்டது, சுதந்தரப் போரின் முன்னணியிலிருந்த காங்கிரஸ் ஆட்சிப்பீடம் ஏற்றது. அதையொட்டி, அரசியலைத் தயாரிக்கவேண் டிய பொறுப்பையும் மேற்கொண்டு, தனக்குப் பிடித்த நிபுணர்களை, தன் சொல்லுக்குத் தலையாட்டும் நபர்களை நியமித்துக்கொண்டு, புது அரசியலைத் தயாரித்து விட்டது. புது காட்டுச் சுதந்தர வாழ்வுக்குப் போராடிய காங்கிரஸ் கட்சியின், முன்னணித் தலைவர்களாக இருந்ததும், இருப் பதும், வடநாட்டினராகவே இருப்பதால், எல்லா வகை யிலும், அதிகாரமும் ஆட்சிப் பொறுப்பும் தங்கள் கையி லேயே இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் டெல்லி ஆதிபத்தியத்தை' சிருஷ்டித்துக்கொண்டு விட்டனர். இந்தியா குடியரசு நாடு என்று பிரகடனம் செய்துவிட்டனர். அதிகாரங்களையும், பொறுப்பையும் தங்கள் வசம் குவித்துக்கொண்டு விட்டனர். இந்த ஏற்பாடுகள் நடந்தபோதும், அதிகாரங்கள் குவிக்கப்படுவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றவேளை யிலும் நமது ஆசையும் எண்ணமும் எதிரொலிக்கும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/36&oldid=1740333" இலிருந்து மீள்விக்கப்பட்டது