பக்கம்:இதயகீதம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இதய கீதம் நாம் செய்யவில்லை. மக்கள் மன்றத்தில், நமது குரல் ஒலித்தது உண்மை, ஆனால், நம்மை ஆட்டிப்படைக்கும் சக்தி உருவாகிக்கொண்டிருப்பதை உணர்த்தினோமே யொழிய, அதைத் தடுக்க வழிசெய்யவில்லை. மூன்று ஆண்டுகள் இப்புது அரசியலமைப்பு ஏற்படுவதற்குள் இடைவேளை இருந்தது. இந்த இடைக்காலத்தில் நாம் தவறிவிட்டோம்; புது அரசியல்-நம்மை விழுங்கும் முதலை - உருவாகிவிட்டது! இந்தத் தவறு-திராவிட முன்னேற்றக் கழகமாக இப்போது உருவாகி வளர்ந்து நிற்கும் நமக்கு இன்று நன்றாகத் தெரிகிறது. வெள்ளம் நம்மை இழுத்துக்கொண்டுபோக ஆரம் பீத்துவிட்டது, உடைப்பு எடுக்குமுன் நாம் அடைக் காததால், எடுத்த பின்னரும் எச்சரிக்கை செய்து தடுக் காததால்! இது என்?- இக்கேள்விக்கு கிடைக்கக் கூடிய பதிலை நாம் விளக்க விரும்பவில்லை ; வேதனை வீணையை மீட்டு வதால் அபஸ்வரம் தான் மீண்டும் எழும்புமேயொழிய ஆபத்தைப் போக்கும் வழியோ, வகையோ, தென்படாது என்பதால்! ரயில் போய்விட்டது; சென்ற திக்கை நினைத்து ஏங்கி பயனில்லை. இனி அடுத்த சந்தர்ப்பம் வரும் வரை, காத்திருக்கத்தான் வேண்டும். அரசியலமைப்பு நம் மீது திணிக்கப்பட்ட நாளான ஜனவரி 26 ஐ நாம் நமது அதிருப்திக்குரிய நாள் என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/37&oldid=1740334" இலிருந்து மீள்விக்கப்பட்டது