பக்கம்:இதயகீதம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது அரசியல் 35 அடிமைப்பட்டுக் கிடந்த இப் பரந்த துணைக் கண் டத்தை, அந்நிய ஆதிபத்தியத்திடமிருந்து மீட்கும் வேலை யில் காங்கிரஸ் பாடுபட்டது. அதன் விளைவாக சுதந்திர தாகத்தை எழுப்பியதன் காரணமாக நாடெங்கும், வெள்ளையன் ஆட்சி ஒழியவேண்டும் என்று எண்ணங் கொண்டிருந்த மக்கள் மன்றத்தில், காங்கிரசின் செல் வாக்கு வளர்ந்தது. காங்கிரசை நடத்திச் செல்லும் முன்னணியிலிருந்த தலைவர்கள் மட்டும், மக்களுக்கு, மகத்தான பாசமும், 'இவர் எம்மை உய்விக்கவத்த உத் தமர்' என்ற எண்ணத்தால் விளைந்த பக்தியும் ஏற்பட லாயிற்று. அன்று சுதந்திரப் போரின்போது ஏற்பட்ட "பக்தி" இன்னும் மாறவில்லை. எனவே, காங்கிரஸ் கட்சியின் முதல் வரிசையிலிருக்கும் (First Rank Leaders) தலை வர்கள், எது சொன்னாலும் சரி, என்ற எண்ணமும், அவர்கள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக நல்லது தான் செய்வர்' என்ற கருத்தும், மக்கள் மனதிலே இன்னும் மாறவில்லை. & காங்கிரஸ் ஆட்சி பீடத்தின் முதல்வரிசையிலிருக்கும் நேரு பட்டேல் போன்றாருடைய செல்வாக்கும், 'சுட்டு வீரல் காட்டினால் போதும் சொன்னதெல்லாம் செய் வேன்' என்று மக்களிடையில் அவர்கள்மீது எழும்பி யுள்ள பக்தியுள்ளமும் இன்னமும் இருக்கிறது. இந்த நிலை பொது மக்களிடம் மட்டும் என்றல்ல ! பொது மக்க ளிடை உலவி வரும் தலைவர்கள்- காங்கிரஸ்காரர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/42&oldid=1740338" இலிருந்து மீள்விக்கப்பட்டது