36 இதய கீதம் எல்லோர் இதயத்திலும், நேரு பட்டேல் போன்றாரிடம் மதிப்பும் மரியாதையும் அளவுக்கு மீறிய வகையிலிருக் கின்றன. அவர்கள் எது சொன்னாலும், அதைச் செய் வதுதான் கடமை, நிறைவேற்றி வைப்பதுதான் தேசீயத் தொண்டு என்ற எண்ணம் நிலவுகிறது. அதன் காரண மாக தப்போ, தவறோ, குற்றமோ, குறையோ எது நேர்ந் தாலும், மத்திய சர்க்காரிலும் சரி, மாகாண மந்திரிமார் களிடத்திலும் சரி, அப்போதைக்கப்போது மறைக்கப் பட்டுப்போய்விடுகிறது. இந்த நிலை என்றும் நீடித்து நிலைக்காது: நீர்க்குமிழிபோல, என்றாவது ஒருமுடிவுக்கு வரத்தான் செய்யும். மற்றும் இந்தியா ஒரேநாடு, யாவரும் இந்தியர் என்று வெள்ளையராட்சியை விரட்ட காங்கிரஸ் கட்சியினர் எழுப்பிய முழக்கம், இந்நாட்டில் வாழும் பல இன கலாச் சார மக்களுடைய மனதில் நிறைந்து கிடக்கிறது. இந்த, ஐக்கிய எண்ணமும், எப்போதும் நீடிக்க முடியாதது நாம்யார்- என்பது, கட்சிப்பற்று,பல்லாண்டுப் பழக்கம் காரணமாக மறைக்கப்பட்டாலும், ஒருநாள், ஒளி வீசத் தான் செய்யும். அதற்கான அறிகுறிகளும் இப்போதே தெரிகின்றன! நேரு, பட்டேல் போன்ற முதல் வரிசைத் தலைவர் களுக்கு அடுத்த படியாக, அவர்கள் இடத்தை "நிரப்ப" காங்கிரஸ் கட்சியில் யாரும் இல்லை. யார், அந்த இடத் துக்கு வந்தாலும், இப்போ திருக்கும் அவ்வளவு செல் வாக்கும் மதிப்பும் ஏற்பட முடியாது.
பக்கம்:இதயகீதம்.pdf/43
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை