பக்கம்:இதயகீதம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது அரசியல் 37 எனவே எதிர்காலத்தில், அந்த இடத்தில் அமருப வர்கள் தங்கள் ஆட்சிப்பொறுப்பையேற்று அதிகாரம் நடத்தத் துவங்கும்போது, மறைந்து கிடக்கும் மனக் குறைகள், மகத்தானதாகத் தெரிய ஆரம்பிக்கும். பிரகாசம் பேச ஆரம்பிப்பார். நேற்றுவரை அவர்கூட இருந்து அவரளவு மதிப்பு பெற்றிருந்த ஒருவர் குடியரசு தலைவராக ஆனால், காரசாரமாக ! காமராஜருக்கும் அந்த அளவு துணிவும், வேகமும் பிறக்கலாம்-இது. இன்றைய அரசியலமைப்பில் "டெல்லி ”யில் கொண்டு போய் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களையும், எதிர் காலத்தையும், ஒப்பிட்டுப் பார்க்கும்போது நன்கு விளங்கும். இப்போதே மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி யினரிடையிலேயே--மத்திய சர்க்கார்மீது எழும்பி யிருக்கும் ஆத்திரமும், அதிருப்தியும் எதிர்காலத்தில் வளரத்தான் செய்யும். இந்த நிலை ஏற்பட்டால் குமுற லும் கொந்தளிப்பும் ஏற்பட்டு கூடாரத்துக்குள்ளேயே குடுமிப் பிடிச் சண்டை ஆரம்பமாகியே தீரும். ஆபத்து நம்மை அணைத்துக்கொண்ட இந்த நேரத் தில், துயர் போக்கவழி கிடைக்குமா, திணிக்கப்பட்ட அரசியலை நீக்க வழி கிடைக்குமா, மாடப்புறா கிட்டுமா என்று எண்ணிப் பார்க்கும்போது, நமது இலட்சியத் துக்கு, விடுதலை வேட்கைக்கு எதிர்பாராத இடத்திலிருந் தெல்லாம் உதவி கிடைக்கும், என்ற நம்பிக்கை ஒளி விடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/44&oldid=1740340" இலிருந்து மீள்விக்கப்பட்டது