38 இதய கீதம் புது அரசியல் அமைப்பு மூலம், மாகாண அதிகாரங் கள் பறிபோய்விட்டன, கூட்டாட்சிக்குப் பதில் ஒரே நபராட்சி உதயமாகிறது, என்று இந்த நாட்டிலுள்ள முற்போக்குக் கட்சிகள் எல்லாம் கண்டித்திருக்கின்றன; பாசீசமும், முதலாளித்துவமும் கோரவாய் திறந்து கொள்ள வழியமைக்கப்பட்டுவிட்டது என்று கண்ட னங்களைச் சொரிந்துள்ளன. மக்கள் மன்றத்திலே மகிழ்ச்சியில்லை, வளர்ந்துவரும் முற்போக்குக் கட்சிகளும் ஏற்கவில்லை, எங்கும் அதிருப்தி மயம் - இந்நிலையில் இந்திய புது அரசியல் ஆரம்பமாகி யிருக்கிறது. எனவே, எதிர்காலம், நமது இலட்சிய வெற்றிக்கு. ஏ துவாக இருக்கும் என்ற நம்பிக்கை நமக்கு ஒளிவீடு இறது. இந்த அரசியலமைப்புக்குப் பதில், இன்னொன்று ஏற்பட்டுத்தான் தீரும் என்ற நிலை, நம் கண்ணுக்குக் காட்சியளிக்கிறது. நமது இலட்சியப் பாதையை மூடும் வகையில் இந்த அரசியலமைப்பில் இடங்களிருக்கலாம். நமது உரிமை முழக்கத்துக்கு மூடியிடும் தந்திர சட்ட திட்டங் களும் இருக்கலாம். நம் கடமைப் பாதையைத் தடுக் கும் வழி வகைகள் இருக்கலாம். எனினும் நாம் கோழை களல்ல : வீரர் பரம்பரை ! 'தவறிவிட்டோம்' என்ற மனக்குறையை, 'தவற மாட்டோம்' என்ற கவனப் பொறுப்பால் மாற்றி, நம்
பக்கம்:இதயகீதம்.pdf/45
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை