பக்கம்:இதயகீதம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது அரசியல் 39 மக்கள் சமுதாயம் விடுதலை பெறும் வழியைக் காண் போம். கலக்கமும் கவலையும் நமக்கில்லை; கடமையும் தொண்டும் நம்மைத் தழுவிக் கிடக்கின்றன ! வேதனை யும், விம்மலும் விலகட்டும்; வீரர்கள் படை ராகட்டும், வெற்றி நமதே; கொட்டு முரசு என்று நாம் கொக்கரிக்கும் நாள் ஒன்று ஏற்பட்டுத்தான் தீரும் ! தயா புது அரசியலமைப்பு நம்மை. அடைத்துப்போட்ட புலிக்கூண்டு. அதினின்றும் வெளியேற, தந்திரமும் சாமர்த்தியமும் மட்டும் போதாது. நேர்மையும் நெஞ்சி லுறுதியும் வேண்டும்! ஒற்றுமையும் கூட்டு முன்னணி யும் உருவாகவேண்டும் ! ஆகஸ்டு 26--இதற்கான சூழ்நிலையை நமக்கு விளக் கியுள்ளது. அதிருப்தியும் மனக் குறைவும் நமக்கு மட் டும் என்றல்ல எல்லோரிடையும் நிலவுகிறது என்பதை எடுத்துக்காட்டிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/46&oldid=1740342" இலிருந்து மீள்விக்கப்பட்டது