பக்கம்:இதயகீதம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவினை கீதம் 41 தனியரசோடு, தனி நாடாக வாழும்போது அவைகளை யெல்லாம் விட பெரிய நிலப்பரப்பான திராவிடம், தனி நாடாக இருக்கமுடியாதா? நிலப்பரப்பு மட்டுமல்ல, இயற்கை வளம் துறைமுக வளம் மலை வளம் மண் வளம் எல்லாம், பன்மடங்கு, நிரம்பியது நாம் கூறும் திராவிட நாடு ! பொன் தரும் சுரங்கங்கள், இரும்பு தரும் கனிகள், வெளிநாட்டிலிருந்து பணம் குவிக்கும் மிளகு- மாங்கனீஸ், அமெரிக்கா அள்ளிச் செல்லும் முந்திரி யாவும் இருக்கிறது இங்கு! மக்கள் நாலரைக் கோடிப்பேர் வாழ்கிறோம் ! நமக் கான பொருள்களை நாமே உற்பத்தி செய்து வாழும் வகைகள், இருக்கின்றன ! தேவையான உழைப்புச் சக்தியும் இருக்கிறது! இருந்தும், சிமெண்டுக்கு டால்மியா ! ஆணிக்கு டாட்டா! ஆடைக்கு ஆமதாபாத்! என்ற நிலை வளர்கிறது. தென்னாட்டில் போதுமான தொழிற்சாலைகள் இல்லை-இருப்பவைகளாலும் வட நாட்டுடன் போட்டி போட முடியவில்லை. காரணம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/48&oldid=1740344" இலிருந்து மீள்விக்கப்பட்டது