பக்கம்:இதயகீதம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இதய கீதம் பெரிய ஆலைகள் அங்கே! அவைகளை வளர்க்கும் பணம் அதற்கு ஆதரவு தரும் மந்திரிகள் ! மந்திரிகளையே ஆட்டுவிக்கும் பிர்லாக்கள்! நிறைந்து விட்டனர், வடநாட்டில், வெள்ளையர் ஆட்சி யில், அவர்களோடு கை கோர்த்துக்கொண்டு வடகாட்டு முதலாளிகள் பெரிய உருவங்களாக வளர்ந்துவிட்டனர். அந்த வளர்ச்சியை முறியடிக்கும் வழி, நம்மிடம் இல்லை. அந்த வளர்ச்சியை எதிர்க்க அதிகாரம் நமக்கு இல்லை. ஆகவே, நம் நாட்டு தொழில் வளம் சிறக்க வக்கில்லை! இதை மாற்றாமல் எப்போதும் போல, தென்னாடு வடநாட்டுக்கு அடிமையாயிருக்கும் வகையிலேயே, புது இந்திய அரசியலமைப்பும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. வடநாட்டவர் கண்காணிப்போடு தயாரிக்கப்பட்ட, இந்திய அரசியலமைப்பால், நாம் என்றும் முன்னேற வழியே யில்லை. இரும்புப் பிடிகள், நம்மை பயங்கர மாகப் பிடித்துக்கொண்டுவிட்டன. திராவிடத்தை, தங்கள் சரக்குகள் விற்கும் சந்தை யாக்கி விட்டனர்-வடநாட்டினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/49&oldid=1740345" இலிருந்து மீள்விக்கப்பட்டது