பக்கம்:இதயகீதம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இதய கீதம் ஒரு நாட்டின் வளம், அங்கு வாழும் மக்கள், தங் கள் தேவைக்கான பொருள்களைப் பெற்று வாழ்தலைக் கொண்டுதான் நிர்ணயிக்கப்படும். பொருள்களில், இயற்கையாகவே கிடைப்பவை அவைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்டவை என இருவகையுண்டு. திராவிடம் மூலப்பொருள் உற்பத்திக்கும் -அவைகளைக்கொண்டு பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் வசதிகள், தளும்பி, வழியும் நாடு. பருத்தி உண்டு - ஆனால் அழகிய ஆடைகளுக்கு ஆமதாபாத், பம்பாயைத்தான் நோக்குகிறோம்! பருத்தியைக் கொண்டு-பக்கத்திலேயுள்ள கோவை யிலேயே நல்ல ஆடைகளைத் தயாரிக்க முடியும். ஆனால், அதற்கான வசதிகள் இங்கில்லைஆகவே, நல்ல முறையிலும், சகாய விலையிலும் இங்கு தயாரிக் கும் சூழ்நிலை உதயமாகவில்லை. ஆகவே, இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருள்களால் - வடநாட்டுப் பொருள் களுடன் போட்டிபோட முடியவில்லை. எலும்புக்கூடு போன்ற உருவமுடையவன், சதை பெருத்த சாண்டோவுடன் சண்டையா போட முடியும்? வீட்டுக்குச் சுவர், வாயிலுக்கு கதவு, வயலுக்கு வரப்பு - இருந்தால் உள்ளேயிருப்பதை பாதுகாப்போடு இருக்கமுடியும். அதுபோலவே திராவிடத்துக்கும் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/51&oldid=1740347" இலிருந்து மீள்விக்கப்பட்டது