பக்கம்:இதயகீதம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவினை கீதம் 45 எல்லைக்கோடு இருந்தால், இங்குள்ள வளம் 'கொள்ளை' போகாமல் காத்துவளர்க்க முடியும். நமக்கென ஒரு எல்லை இல்லை. கேட்டால் தேசீயம் பேசுகிறார்கள்—ஏக இந்தியா, அகில இந்தியா, அகண்ட பாரதம், ஐயோ ! இதையா துண்டாடுவது என்று துடித்துப் பேசுகிறார்கள். ஒற்றுமையோடு வாழ்வோம் யாவரும் இந்திய மக்கள், ஐக்கியமே நமது இலட்சியம் என்று அழகுபட, வர்ணிக்கிறார்கள். இந்த ஒற்றுமைப் பேச்சு, கவைக்குதவாதது- சொல்ல இனிக்கும், செயலில் வரமுடியாது என்று நாம் கூறி வருகிறோம். நமது கூற்றுக்கள், எவ்வளவு ஜீவ சக்தி நிறைந்தவை என்பதை பல நிகழ்ச்சிகள் படம் பிடித்துத் தந்தவண்ணமிருக்கின்றன. 1.உணவுப் பொருள்களைப் பெருக்கும் திட்டங் களுக்காக, மாகாண சர்க்கார் மத்திய சர்க் காரைக் கடன் கேட்டது கிடைக்கவில்லை! 2. உணவுப் பஞ்சம் ஏற்பட்டதைக் காட்டி உதவ வேண்டுமென கெஞ்சிக் கேட்டது - பலன் பூஜ்யம்! வதி 3. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீடிக்க வேண்டும். என சென்னை சர்க்கார் இந்திய சர்க்காருக்கு பன்முறை தெரிவித்திருக்கிறது இருந்தும் அது கூடாது, ரத்து செய்க என்று மல்லி சர்க்கார் கட்டளை இட்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/52&oldid=1740348" இலிருந்து மீள்விக்கப்பட்டது