பக்கம்:இதயகீதம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 இதய கீதம் மாகாண சர்க்கார் கோரி, மத்திய சர்க்கார் மறுத்து, அம்பலத்துக்கு வந்த நிகழ்ச்சிகள் இவை. வெளிக்குத் தெரியாமல், இன்னும் பல இருக்கலாம். அதேபோல், மத்திய சர்க்கார் கட்டளையிட, அதை மீறி, மாகாண சர்க்கார் நடந்துவரும் நிகழ்ச்சிகளும், தினசரி, வளர்ந்து கொண்டுதான் உள்ளன. அவைகளில், அம்பலத்துக்கு. வந்தவை. 1. மதுவிலக்கு இப்போது கூடாது, பிற்பாடு கவனிக்கலாம் என்று டில்லி சர்க்கார் தாக்கீது தந்தது. அதைப் பொருட்படுத்தாது, மாகாண சர்க்கார் மதுவிலக்கை சென்னை மாநிலம் முழுதும் அமுல் நடத்தியது. 2. ஜமீன் ஒழிப்பு மசோதாவை அவசரமாகக் கொண்டு வருதல் வேண்டாம் என்று டில்லி சர்க்கார் 'யோசனை கூற, அதை ஒரு புறம் தள்ளிவிட்டு, ஜமீன் ஒழிப்பை சட்டமாக்கியது. 3. இந்தி கட்டாய பாடமாக்கப்பட வேண்டும் என்ற டில்லி சர்க்காரின் ஆசையை, அலட்சியம் செய்து மாகாண சர்க்கார் இந்தியை இஷ்ட பாடமாக்கிற்று. ஒரே நாடு. ஒரே சர்க்கார். ஒற்றுமைராஜ்யம் என்று பேசும் காங்கிரஸ் கட்சியினர்தான், மாகாணத்திலும், மத்திய சர்க்காரிலும் ஆட்சிபீடத்திலமர்ந்திருப்பவர்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/53&oldid=1740349" இலிருந்து மீள்விக்கப்பட்டது