48 இதய கீதம் யிருக்கின்றன வென்பது விளங்கும். வட நாட்டு மாகாணங்களின், இத்தகைய சுயநலக்கொள்ளைக்கு இந்தியா முழுமையையும் ஆளும்-ஆள ஆசைப்படும்- மத்திய சர்க்காரும், எவ்வளவு ஒத்தூதுகிறது, என்பதும் தெளிவாகும். 1. அரிசிப் பஞ்சம் தாங்காமல், சென்னை சர்க்கார் அரிசி வேண்டுமென டில்லி சர்க்காரை வேண் டியது. டில்லி சர்க்காரும், ஐக்கியமாகாணத் தில் அரிசி நிறைய இருப்பதால், அங்கிருந்து அனுப்பிவைக்குமாறு, அந்த மாகாண சர்க்கா ருக்கு கட்டளையிட்டது, கட்டளையின்படி சென்னை சர்க்காருக்கு ஐக்கிய மாகாணத்திலி ருந்து அரிசி வந்தது- வந்த அரிசி படுமோசமானது மட்டுமல்ல! விலை யும், இங்கு விற்பதைவிட பலமடங்கு அதிகம்! இதன் காரணமாக சென்னை சர்க்காரின் கஜானாவிலிருந்து ஒரு கோடி ரூபாய், ஐக்கிய மாகாண சர்க்காருக்குப் போயிற்று. பணமில்லை என்று திண்டாடும் திராவிடத்தி லிருந்து ஒரு கோடி ரூபாயை வாங்கி, மத்திய சர்க்கார், இன்னொரு மாகாணமான ஐக்கிய மாகாணத்துக்குத்தானம் செய்திருக்கிறது, 2. சர்க்கரை நெருக்கடி கதையும் இதுபோலத் தான். வடநாட்டு ஐக்கிய மாகாணம்- நேரு பிறந்த பிரதேசம்--ஏராளமான பணம்
பக்கம்:இதயகீதம்.pdf/55
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை