பக்கம்:இதயகீதம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவினை கீதம் 49 'கொள்ளை' அடித்தது. அதைத் தடுக்காமல் டில்லி சர்க்காரும் நீண்டநாள் காலத் தவணை செய்து வந்தது. ஐக்கிய மாகாணமும் சென்னை மாகாணத்தைப் போல 'இந்திய பாரதபூமி'யில் ஒரு பகுதி தான் ! இருந் தும், சென்னை திண்டாடும் போது, உதவும் பெருந்தன் மையோ உதார குணமோ ஏற்படவில்லை அதற்கு. ஏற்படவில்லை - என்பதை நாம் குற்றச்சாட்டாகக் கூறவில்லை. ஏற்படமுடியாது !இது அப்போதிருந்தே சொல்லி வருவதாகும். நாம் ஒரே நாடு என்றாலும், இந்தியா ஒரு பரந்த உப கண்டமாகும். இங்குள்ள ஒவ்வொரு மாகாணமும் ஒவ் வொரு நாடாகும்! ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட் டால், இது விளங்கும்! - திராவிடநாடு - சென்னை மாகாணம் 142000 சதுரமைல் பரப்புடையது. உலக வல்லரசுகளிலே ஒன் றான, இங்கிலாந்தைவிட இரண்டுமடங்கு நான்கு ஆஸ்திரியாக்களுக்குச் சமம்! 5 பெரியது பல்கேரியா 2 செக்கோஸ்லோவேக்யா 8 கிரீஸ் 10 பெல்ஜியம் 4 அயர்லந்து 4 போர்ச்சுகல் 10 ஹாலந்து 14 பாலஸ்தீன் (பழைய) முறையே கொண்டது நமது நாடு !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/56&oldid=1740352" இலிருந்து மீள்விக்கப்பட்டது