52 இதய கீதம் யும், கன்னலும் செந்நெலும் கவின்பெற்றுத் திகழ்ந்தது தான் தென்னாடு. முடியுடை மூவேந்தர்கள், தமிழகத்தின் காவலர் களாக இருந்தனர் கன்னித் தமிழின் மடிமீது அவர்கள் மகிழ்ந்தனர். அந்த நாள் - வீழ்ந்தது! சோழன் செங்கோல் முறிந்தது-பாண்டியன் முரசும் கிழிந்தது-சேரன், சிங்கநாதம் அழிந்தது. விளைவு - தமிழகம் வந்தாரை வாழ வைக்கும் நாடு ஆயிற்று. வெள்ளையர் இந்திய பூபாக முழுவதையும் தந்தி ரோபாயத்தால் தனக்கு அடிமையாக்கியதும், இப்பெரும் நிலப்பரப்பை பல்வேறு மாகாணங்களாக்கினர் தமது ஆட்சி வசதிக்காக. வெளிநாட்டான் ஆதிக்கத்துக்கு முன்னதாக, இந் தப் பரந்த உபகண்டம் ஒரே நாடாக இருந்ததில்லை. இந்தியா, பல வேறு இனத்தவர் வாழும் நாடு என் பது, இன்று எல்லோரும் உணர்ந்ததாகும். வட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து இந் நாடு விடுவிக்கப்பட்டதும், இம்மாபெரும் நிலப்பரப்பு தமக்குக் கீழ் கிடக்கவேண்டுமென்ற பேராசை இந்தியத் தலைவர்களுக்கு அதிகமாகிவிட்டது. தங்களது மொழியையும், வாழ்க்கைமுறையையும், எங்கும்திணித்து
பக்கம்:இதயகீதம்.pdf/59
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை