புலிந்கர் மாந்தர் "வேல் தாக்க, வேகம் தாங்காது அதோ வீழ்ந்து கிடக்கிறதே யானை. அதன் முரசத்தைத் தன் மெத்தணை யாகக் கொண்டு கிடக்கிறான்! நல்ல விருந்து இன்று நமக்கென்று எக்களித்து, இரு சிறகடித்து வட்டமிட்டுக் இடக்கும் பருந்துகளின் கூட்டம், அவனுக்கு கீழற் பந்தல் அமைத்துவிட்டது! வேழத்தின் முரசம் மெத்தை- விருந்து எனப் பறக்கும் பருந்துக்கூட்டம் அவனுக்குப் பந்தல்! வேலி எதுவும் இல்லையோ அவனைச் சுற்றி என்று எண்ணுகிறாயா-பார்! எத்தனைப் பிணங்கள் அவனைச் சுற்றிக் கிடக்கின்றன, அத்துணையும் அவனது வாளும் வேலும் கொன்று குவித்த மனித மலைகள்! அவைகள், அவனது வேலிபோலக் கிடக்கின்றன ! கொக் குக் கூந்தல், குரங்கு மேனி ஈரை மூதாட்டியே! நன்றாகப் பார்! தெரியவில்லையா? அதோ,சிறகு அடித்து சிங்கார மாகப் போய் உட்காருகின் றனவே, கழுகுக் கூட்டங்கள் --அந்த இடத்தைப் பார்! மதயானைபோல மாண்டு கிடக்கிறான் உன் மகன் காளையெனச் சீறி, களத்திலே
பக்கம்:இதயகீதம்.pdf/8
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை