2 இதய கீதம் பாய்ந்து, செஞ்சோற்றுக்கடன் வெஞ்சமத்தாற்றிக், களிறு தலைமடுத்துப் பிணமாகிக் கிடக்கிறான், நீ பெற்ற மகன்!” - ஒரே மகன் தன் குலக்கல் நாட்ட வந்த குல விளக்கு - அவனைப் பெற்றெடுத்த தா யோ நரை மூதாட்டி! களத்துக்குச் சென்ற தன் காளையைக் காணத் துடித்து வருகிறாள்-உயிருடன் தப்பினானா, வீடு வந்து சேர்வானா என்ற ஆசையோடு அல்ல! புயலெனப் பாய்ந் தானா, புலியெனக் கிழித்தானா, புகழ் மரணம் அடைக் தானா அல்லது புல்லனாகிப் போனானோ! புறமுதுகிட் டானோ என்று கண்டு தெளிந்துகொள்ளும் நோக்குடன் ! தேடிப் பார்க்கிறாள் !-திண்தோள் வீரர்கள் சாய்ந்து கிடக்கும் அச்சமர்க் களத்தில். திகைக்கிறாள் - தன் மகனைக் காணாது. அப்போது, ஒருவர் காட்டுகிறார், அவளது மகன் காற்றெனச் சுழ று பகைவரைக் கொன்று பாசறையில் உயிர் துறந்தான், மார்பிலே ஈட்டி தாங்கி- என்பதாக! - வீரம் செறிந்த இக் கவிதை ஓவியம்- தீந்தமிழின் புறநானூறு செப்பும் ஒரு சிறு துணுக்கு, சிந்தை அயர்ந்து, வீரம் மறந்து, வீணராகிவிட்ட வீரப் பரம்பரையின் வெற்றி ஏடு-கமது பழம் பெரு மையின் பளிங்குமா மண்டபம் தரும் சிறு ஒளி ! கனியிடை ஏறிய சுளையும், காய்ச்சிய பாலிடை ஏறிய ருசியும் தரும் செந்தமிழின் சிறப்புறு காவலர்கள்
பக்கம்:இதயகீதம்.pdf/9
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை