பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமது பயத்திலிருந்து அவரால் இன்னும் மீள முடியவில்லை. அவரது கன்னம் சுருங்கி நெளிந்தது; கைகள் முழங்கால்களின் மீது நடுங்கிக் கொண்டிருந்தன. அவர் தமது பலத்தையெல்லாம் சேகரித்து, தமது தளர்ச்சியை வெற்றி கொள்ளவும், தாம் எவ்வாறு நடுங்குகிறோம் என்பதை நாங்கள் கண்டு கொள்ளாத வாறு மறைக்கவும் முயன்றார்; ஆயினும் இதில் அவர் வெற்றி பெறவில்லை, அவருக்கு வழங்கப்பட்ட சிகரெட்டை அவர் ஆசை யோடு புகைத்த பின்னர்தான், அவர் தமது நிதானத்தைத் திரும்பப் பெற்றார், அவர் சுருட்டைத் தலைமுடியையும் ஒன்றுக்கொன்று மிகவும் இடைவெளிவிட்டு விலகியிருந்த அசட்டுத்தன மா ன நீலநிறக் கண்களையும் கொண்டவராக . இருந்தார். சந்தேகத்துக்கிட' மில்லாத ஆரிய இனத்தைச் சேர்ந்த அவர் பசியால் மிகவும் வாடியிருந்தார்; யுத்தமோ மேலும் மிக மோசமாக அவர் வாடிக் களைத்துப் போகவே வழி செய்திருந்தது, அவர்களது அன்றாட ரேஷன் மூன்று சிகரெட்டுகளும், ஒரு சிறு ரொட்டியும், மெஸ் டின்னில் பாதியளவுக்குச் சூடான சூப்பும்தான், மேலும் பதுங்கு குழிகளில் சூடான உணவைக் கொண்டு கொடுப்பதும் எப்போதும் சாத்தியமாக இல்லை. எனவே ஜெர்மானியர்கள் பட்டினி 'கிடக்கத்தான் நேர்ந்தது. - சோவியத் ரஷ்யாவோடு நடத்திய போரின் விளைவுபற்றி அவர் என்ன நினைத்தார். அது ஒரு உதவாக்கரை முயற்சி என்றே அவர் கருதினார். ரஷ்யாவைத் தாக்குவதில் ஃபூரெர் ஒரு தவறிழைத்து விட்டார், ஜெர்மனி யால் விழுங்க முடியாத அளவுக்கு அது மிகவும் பெரிய நாடாக இருந்தது, இங்காவது தாம் தமது மனத்திலுள்ளதைத் தாராளமாகப் பேசுவதற்குத் தமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்றும், தமது கம்பெனியில் தாம் இந்த மாதிரி என்றுமே பேச முடியாதென்றும், ஏனெனில் நாஜிக் கட்சியின் உறுப்பினர்கள் போர்வீரர்களை உளவு பார்த்து வந்தனரென்றும் அவர் கூறினார், சிந்திக்காமல் வாய் தவறிக் கூறும் ஒவ்வொரு சொல்லும் துப்பாக்கியினால் , சுடப்பட்டு மாயும் கதியையே ஏற்படுத்தக் கூடும். செய்திருக்க வேண்டியது என்னவென்றால், இங்கிலாந்தைத் தோற்கடித்து அதன் காலனி நாடுகளைக் கைப்பற்றிவிட்டு, அத்துடன் யுத்தத்தை முடித்துக் கொள்வதாகத்தான் இருக்க வேண்டும் என்பதே அவரது சொந்த அபிப்பிராயமாக இருந்தது. ஆக்கிரமிக்கப்பட்ட, சோவியத் தீராதிசத்தில் அவரது அனுபவங்கள் பின் வருமாறுதான். இருந்தன: அங்கு போதிய

உணவு இல்லை, ஜெர்மன் ராணுவத்தின் முன்னேறி வந்த

97