பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

இந் நூலில் இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் ஒன்றில், மிக்கேல் ஷோலகோவ் தமது மேஜையின் முன் அமர்ந்து கடிதங்கள் சிலவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அவரது (வேலை நேரத்தில் ஒரு பெரும் பகுதியை இந்தக் கடிதங்களே எடுத்துக் கொள்கின்றன. இந்த எழுத்தாளர் வசித்து வரும் டான் நதிக்கரைக் கிராமமான வெஷென்ஸ்காயாவுக்கு சோவியத் யூனியனின் சகல பகுதிகளிலிருந்தும் மூட்டை மூட்டையாகத் தபால்கள் வருகின்றன. ஆழமான சொந்த விஷயங்களிலிருந்து அரசு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் வரையிலான விஷயங்கள் குறித்து மக்கள் அவரது ஆலோசனையையோ, உதவியையோ கோரி, அவருக்கு எழுதுகின்றனர். பலர் அவரிடம் தமது எண்ணங்களை அந்தரங்கமாகத் தெரிவிக்க விரும்புகின்றனர்; அறிவாழம் மிக்க மூத்த நண்பர் ஒருவரிடம் கூற முனைவதுபோல், அவர்கள் தம்மைப்பற்றி அவரிடம் கூறுகின்றனர், இளம் மக்களும் அவருக்கு எழுது கின்றனர், அரும்பிவரும் இளம் எழுத்தாளர்களும் கூடத்தான்.


ஷோலகோவுக்கு வரும் தபால்கள் பலவும் முற்றிலும் காரியார்த்தமான தன்மை படைத்தவைதாம். அவர் படித்துப் பார்ப்பதற்காக அவரது ஆரம்ப காலக் கதைத் தொகுதிகளின் புரூபுகள் அவருக்குத் தபாலில் வருகின்றன; அவரது கதைகளில் ஒன்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய திரைப்படத்தை வெஷென்ஸ்காயாவில் திரையிட்டுக் காட்டுவதற்காக அவரிடம் ஒரு தேதியைக் கேட்டு ஒரு திரைப்பட ஸ்டூடியோ அவருக்கு எழுதுகிறது; அவரது கதையின் நாடகமாக்கம் ஒன்றைப்பற்றி ஒரு நாடக அரங்கு அவரது ஆலோசனையைக் கேட்டறிய விரும்புகிறது.


பயன்மிக்க கலாசாரப் பரிவர்த்தனையை மேலும் மேம்படுத்துவதிலும், நாடுகளுக்கிடையே பரஸ்பர நல்லிணக்கத்தை

இ. க. - 1