பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு அகத்தியபோது அங்கிருந்த அரசியல் போதகர், எனது வியப்புற்ற) பார்வையைத் தடுத்து நிறுத்தி, தணிந்த குரலில் இவ்வாறு விளக்கமளித்தார்: ",அவரது உணர்ச்சிகள் கொதித்துப் போயுள்ளன. அதனை அவரால் தவிர்க்க முடியாது, அவர் ஜெர்மானியர்களிடம் ஒரு கைதியாக இருந்திருக்கிறார். இந்த விஷயம் உங்களுக்குத் தெரியாதா? பின்னொரு சமயம் அவரிடமே இதுபற்றிக் கேளுங்கள், அங்கு அவர் அனுபவித்த துன்பங்களுக்குப் பிறகு, உயிருள்ள ஜெர்மானியன் ஒருவனைப் பார்ப்பதையே அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. உயிருள்ளவர்களை மட்டும்தான் நான் குறிப்பிடுகிறேன். இறந்து போன வழர்களைப் பார்ப்பதை அவர் பொருட்படுத்துவதில்லை, ஆனால் அவர் ஜெர்மன் கைதிகளைப் பார்க்கும்போது, ஒன்று அவர் தமது கண்களை மூடிக் கொள்வார்; அல்லது தமது சாம்பல் நிற முகத்தில் வியர்வை வழிந்தோட அப்படியே உட்கார்ந்திருப்பார்; அல்லது வெறுமனே எழுந்து போய் விடுவார், அவர் தமது குரலை ரகசியம் பேசுவது போல் தாழ்த்திக் கொண்டு, என்னருகே நெருங்கி வந்து இவ்வாறு கூறினார்: நான் இருமுறை அவரோடு சேர்ந்து தாக்குதலில் இறங்கியிருக்கிறேன். அவர் குதிரையைப்போல் பலம் மிக்கவர்; அவரால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்கள் நேரில் பார்க்க வேண்டும்... நானும் எவ்வளவோ விஷயங்களைப் பார்த் திருக்கிறேன். ஆயினும் அவர் தமது துப்பாக்கிச் சனியனையோ, துப்பாக்கி மட்டையையோ வீசிச் சுழற்றித் தாக்குவதைப் பார்க்கும்போது, நமது உடம்பே புல்லரிக்கும், அன்றிரவு ஜெர்மன் கனரக பீரங்கிகள் தொல்லை கொடுக்கும் பீரங்கிப் பிரயோகத்தைத் தொடங்கின. அவை முறையாக, குறிப்பிட்ட இடைவேளைகளுக்குப் பிறகு, குண்டுகளைச் சுட்டுத் தள்ளின: முதலில் நாங்கள் தூரத்தில் குண்டு வெடிக்கும் ஓசையைக் கேட்டோம். சில வினாடிகளில் நட்சத்திரங்கள் சுடர் விடும் வான்வழியாக, தலைக்குமேல் பறந்து செல்லும் குண்டின் கணகணக்கும் கீச்சொலி வந்தது; இந்தப் புலம்பு.(லொ லி அளவில் டேரிதாகிப் பின்னர் மங்கி மறைந்தது; இதன் பின்னர் எங்களுக்குப் பின்னால் எங்கோ ஓரிடத்தில், போர்முனைக்கு எஆயுதத் தளவாடங்களைக் கொண்டு வரும் லாரிகள் நாள் முழுவதும் நெருக்கமாக அணி வகுத்துச் சென்ற ரோட்டுப்பாதை இருந்த திசையில், மஞ்சள் நிறமான தீப்பிழம்புகள் வெடித்துக் கிளம்பின;

அத்துடன் குண்டு வெடிப்பின் இடிமுழக்கமும் கேட்டது.

106