பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைதிகளாக எங்கள் எல்லோரையும் காட்டின் ஓரத்தில் ஒன்று சேர்த்து வரிசையாக நிற்க வைத்தனர். கைதிகளில் 'பலரும் பிரதானமாக மற்றொரு யூனிட்டைச் சேர்ந்தவர் களாகவே இருந்தனர்; எனது . ரெஜிமெண்டின் மூன்றாவது கம்பெனியைச் சேர்ந்தவர்கள் இரண்டே இரண்டு பேர்தான் இருந்தனர். கைதிகளில் மிகப் பெரும்பாலோர் காயமடைந் திருந்தனர், அந்த ஜெர்மன் லெப்டினென்ட் ஓட்டை ரஷ்ய மொழியில் பேசியவாறே, எங்கள் மத்தியில் கமிஸார்களோ அல்லது ' அதிகாரிகளோ யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டான். எவரும் பதில் சொல்லவில்லை. பிறகு அவனே இவ்வாறு சொன்னான் : * கமிஸ்ார்களும், அதிகாரிகளும், இரண்டடி முன்னே வரவும்!' எவரும் இடம் விட்டு அசையவில்லை, “ அந்த லேப்டினென்ட் எங்கள் வரிசை யின் பக்கமாக மெதுவாக நடந்து வந்தான். யூதர்கள்போல் தோற்றமளித்த பதினைந்து அல்லது பதினாறு பேரைப் பொறுக்கியெடுத்தான். அவர் கள் ஒவ்வொருவரின் முன்பும் சென்று, * நீ யூதீனா?" என்று கேட்டான் ; பிறகு அவர்களது பதிலைக் கேட்பதற்குக்கூடக் காத்திராமல், அவர்களை வரிசையை விட்டு வெளியே வருமாறு உத்தரவிட்டான். அவர்களில் பெரும்பாலோர் யூதர் கள்தான்;. என்றாலும் அவர் கள் மத்தியில் கறுத்த தலைமுடியும் கறுத்த சர்மமும் கொண்ட பல அர்மீனியர்களும், ரஷ்யர்களும் இருக்கவே செய்தனர். அவர்கள் அனைவரும் ஒரு பக்கமாகக் கொண்டு செல்லப்பட்டனர்; பின்னர் எங்கள் கண் முன்னாலேயே அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் எங்களை அவர்கள் அவசரம் அவசரமா கச் சோதனை போட்டனர். எங்கள் பைகள் மற்றும் எங்களது சட்டைப் பைகளிலிருந்த பொருள்கள் ஆகிய எல்லாமே எடுத்துக் கொள்ளப்பட்டன , ஒரு விஷயம், உங்களுக்குத் தெரியுமா? நான் எனது கட்சிக். கார்டை, அதைத் தொலைத்து விடுவோம் என்ற பயத்தில், என் தோள்ப்பையில் என்றுமே கொண்டு சென்றதில்லை. அதனை நான் என் கால்சராய்ப் பாக்கெட்டில்தான் வைத்திருந்தேன், அந்த ஜெர்மானியர்கள் என்னைச் சோதனை போட்டபோது, அதனைக் கண்டு பிடிக்கத் தவறி விட்டனர். மனிதன் ஒரு வியத்தகும் பிராணி என்றே நான் சொல்லுவேன்! என் உயிரே ஒரு நூலிழையில் தான் தொங்கிக் கொண்டிருந்தது என்பதை நான் அறிந்திருந்தேன்; நான் கொல்லப்படவில்லையென்றாலும், தப்பியோட முயலும்போது, வழியில் எப்படியும் கொல்லப் படுவேன் என்பதையும் நான் அறிந்திருந்தேன். ஏனெனில் :

ரத்தச் சேதத்தால் நான் மிகவும் பலவீன மாக இருந்ததால்

117