பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லிருந்த டாங்கியில் இருந்த ஒருவன், நாங்கள் கைதிகள்தான் என்பதைச் சரிவர அடையாளம் கண்டு கொண்டு, டாங்கிரின் வேகத்தை அதிகரித்து, அதனை எங்கள் வரிசையை நோக்கி நேராக ஓட்டி வந்தான் ; இதன் மூலம் முன் வரிசைகளில் பீதியை ஏற்படுத்தி, தனது டாங்கியின் போக்கினால் எங்கள் போர்வீரர்களை இடித்துத் தள்ளினான். எங்களுக்குக் காவலாக வந்தவர்கள் இந்தக் காட்சியைக் கண்டு, தமது கைகளை ஆட்டிக் கொண்டும், டாங்கிகளின் மேல் தளங்களிலிருந்து தமது தலைகளை நீட்டிக் கொண்டிருந்த டாங்கி வீரர்களை நோக்கி ஏதோ கூறி கத்திக் கொண்டும், விலா வெடிக்கச் சிரித்தனர். மனமாரச் சிரித்து முடித்த பின்னால், அவர்கள் மீண்டும் ' எங்களை ஒழுங்காக அணி வகுத்து நிற்க வைத்து, ரோட்டின் ஓரமாக எங்களை நடத்திச் சென்றனர். நிச்சயமாக அவர் களுக்கு, இந்த ஜெர்மானியர் களுக்குச் சிரிப்பதும் பிடித்திருக்கிறது .....

    • அன்றிரவு நான் தப்பித்துச் செல்ல எந்த முயற்சியும்

செய்யவில்லை; அதிக தூரம் செல்ல முடியாத அளவுக்கு நான் மிகவும் பலவீனமாக இருந்ததை உணர்ந்தேயிருந்தேன். மேலும், எங்களுக்குப் பலத்த காவலும் போடப்பட்டிருந்தது; எனவே தப்பித்துச் செல்ல முயலும் எந்த முயற்சியும் தோல்வி யில்தான் முடிந்திருக்கும். என்றாலும், அத்தகைய முயற்சியை நான் செய்யாமைக்காகப் பின்னால் என்னையே எவ்வளவு தூரம் சபித்துக் கொண்டேன் என்பது உங்களுக்குத் தெரியாது! மறு நாள் நாங்கள் ஒரு ஜெர்மன் காலாட்படைக் கம்பெனி தங்கியிருந்த ஒரு கிராமத்தின் வழியாக நடத்திச் செல்லட்டி பட்டோம். அங்கிருந்த ஜெர்மானியர்கள் எல்லோரும் எங்களைப் பார்ப்பதற்காகத் தெருவில் வந்து கூடிவிட்டனர். போர் முனைக்குச் செல்லும் வழியில் சென்று கொண்டிருந்த அந்தக் காலாட் ப633டக் கம்பெனிக்குத் தைரியம் ஊட்டுவதற்காக, எங்களுக்குக் காவலாக வந்தவர்கள் எங்களைத் துள்ளித் துள்ளி ஓடுமாறு செய்து, எங்களை அவமானப்படுத்தி, அந்தக் கிராமம் முழுவதன் வழியாகவும் எங்களை ஓட ஓட விரட்டினர். நாங்கள் ஓடினோம். யாராவது மெதுவாக ஓடினாலோ அல்லது கீழே விழுந்தாலோ, அங்கேயே அவர்களைச் சுட்டுத் தள்ளினர். “் அன்றைய பொழுது சாய்வதற்குள், நாங்கள் ஒரு யுத்தக் கைதி முகாமில் அடைக்கப்பட்டோம். இதற்காக ஒரு எந்திர மற்றும் டிராக்டர் நிலையத்தின் முற்றம் கனத்த 'முள்கம்பி வேலியினால் நாலாபுறமும் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது.

அதனுள். ' கைதிகள் சிறு மீன் - குவியலைப்போல் அடைக்கப்

120