பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டிருந்தனர். நாங்கள் முகாம் காவலாளிகள் வசம் ஒப்படைக் கப்பட்டோம்; அவர்கள் தமது துப்பாக்கி. மட்டை களால் எங்களை அடித்தும், முடுக்கியும், அந்த முகாமுக்குள் எங்களை மந்தைபோல் விரட்டிச் சென்றனர், அது நரகமாக இல்லை ; அதைக் காட்டிலும் மோசமாக இருந்தது, அங்கு கக்கூஸ்களே இல்லை. கைதிகள் அங்கேயே மலஜலம் கழித்தனர்; மலஜலம் நாறும் அந்த இடத்திலேயே கைதிகள் நிற்கவோ அல்லது படுக்கவோ வேண்டும் என்று அங்கு எதிர்பார்க்கப்பட்டது. பலவீனமானவர்கள் எழுந்திருக்கவே இல்லை. எங்களுக்கு உணவும் தண்ணீரும்-அதாவது ஒரு குவளைத் தண்ணீரும், ஒரு கைப்பிடி யளவுக்கு வேக வைக்காத தினைத் தானியமும் அல்லது புளுத்துப் போன் சூரிய காந்தி விதைகளும்-நாளொன்றுக்கு இருமுறை வழங்கப்பட்டன. சில நாட்களில் காவலாளிகள் கைதிகளுக்கு உணவளிக்கவே முற்றிலும் மறந்துவிட்டனர்.

  • * நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்த , மூன்றாம் ' நாளன்று

மழை கொட்டத் தொடங்கியது. நாங்கள் முழங்கால் அளவுச் சேற்றில் நடந்து சென்றோம். காலையில் கைதிகள் குதிரைகளைப் போல் சுடு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தனர். அந்தப் பேய் மழை எப்போதாவது , நிற்கும் என்ற நம்பிக்கைக்கே இடமில்லாததுபோல் தோன்றியது ,,...ஒவ்வோர் இரவிலும் டஜன் கணக்கில் கைதிகள் மாண்டனர், நாங்கள் நாளுக்கு நாள் பசிக் கொடுமையினால் மேன்மேலும் பலவீனமடைந்து , வந்தோம். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல், எனது காயங்களும் எனக்கு நரக வேதனையளித்து வந்தன , ஆறாவது நாளன்று என் தோளிலும், தலையிலும் வேதனை மிகவும் அதிகரித்து வந்ததை நான் உணர்ந்தேன். எனது காயங்களில் சீழ் பிடிக்கத் தொடங்கிவிட்டது. அவற்றிலிருந்து - துர் நாற்றம் வீசியது. மிகவும் மோசமாகக் காயமடைந்துள்ள சோவியத் போர் வீரர்களை அந்த முகாமுக்கு அருகிலுள்ள, கூட்டுப் பண்ணைக் குதிரை லாயங்களில் வைத்திருப்பதாகவும், அங்கு அவர்களைக் - கவனித்துக் கொள்ள ஒரு டாக்டரும் இருந்ததாகவும் என்னிடம் கூறினர். அங்கு சென்று அந்த டாக்டரைப் பார்க்க, அனுமதிக்குமாறு, நான் காலையில் காவலாளிகளின் சார்ஜெண்டிடம் கேட்டுக் கொண்டேன். அவன் ரஷ்ய மொழியை நன்றாகப் பேசினான். “போ. போய் உங்கள் டாக்டரைப் பார். அவர் உடனே உனக்குச் சிகிச்சை செய்வார்” என்று பதிலளித்தான் அவன்.. “ “ அதில் தொனித்த கிண்டலை நான் புரிந்து கொள்ளவில்லை.

நான் நம்பிக்கையோடு அந்த லாயங்களை நோக்கிச் சென்றேன். "

121