பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொறுக்கியெடுத்ததற்காகச் சுட்டுக் கொல்லப்பட்டார். நாங்கள் ஓர் உருளைக்கிழங்கு வயலைக் கடந்து சென்றிருந்தபோது, இந்த மனிதர்-அவர் பெயர் கொஞ்ச்சார்; அவர் ஓர் ஐடக்ரேனியர்-- அந்தப் பாழாய்ப்போன உருளைக்கிழங்கைக் கையால் பொறுக்கி யெடுத்து, அதனை மறைத்து வைக்க முயன்றார். அவர் இவ்வாறு செய்வனத ஜெர்மன் காவலாளி கண்டுவிட்டான், அவன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், கொஞ்ச்சாரின் பக்கமாக வந்து, அவரது தலைக்குப் பின்னால் சுட்டுத் தள்ளினான். எங்கள் வரிசையை நிற்குமாறும் ஒரே வரிசையாய் நிற்குமாறும் உத்தர விடப்பட்டது. அந்தக் காவலாளி எங்களைச் சுற்றியுள்ள வயல் களைக் கையைவிசிச் சுட்டிக் காட்டியவாறே, 'இவையாவும் ரீச்சின் சொத்துக்களாகும். உங்களில் எவரனுேம் அனுமதியின்றி எதையேனும் எடுத்தால், அவர்கள் சுட்டுக்கொல்லப்படு வார்கள்' என்று கூறினான். நாங்க ள் ஒரு கிராமத்தின் வழியாக நடந்து சென்றபோது , அங்கிருந்த பெண்கள் எங்களை நோக்கி ரொட்டித் துண்டுகளையும், அவித்த உருளைகிழங்குகளையும் விட்டெறிந்தனர், எங்களில் சிலர் அவற்றைப் பிடித்துக் கொள்ளவோ அல்லது பொறுக்கி யெடுத்துக் கொள்ளவோ முடிந்தது ; ஏனையோர் அத்தனை அதிருஷ்டசாலிகளாக இல்லை. ஏனெனில் எங்களது காவலாளி கள் ஜன்னல்களை நோக்கிச் சுட்டனர்; எங்களையும் விரைவாக நடந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். அந்தக் கிராமத்திலுள்ள பிள்ளைகள் ----இளம் பிள்ளைகள் பயமறியாதவர்கள் என்பது தான் உங்களுக்குத் தெரியுமே--அவர்கள் எங்க ளுக்கு மிகவும் முன்னால் ஓடிச் சென்று, ரோட்டின் மீது ரொட்டிகளைப் போட்டு வைத்தனர்; நாங்கள் அதற்குப் பக்கத்தில் வரும்போது அதனைப் பொறுக்கியெடுத்துக் கொள்ள முடியும் என்பதற் காகவே அவர்கள் இவ்வாறு செய்தனர். இவ்வாறு உணவுப் பொருள்களைப் பெற்ற ஒரு சில அதிருஷ்டசாலிகளில் நானும் ஒருவன். நான் ஒரு பெரிய உருளைக் கிழங்கைப் பிடித்து வைத்திருந்தேன். அதில் ஒரு பாதியை எனக்கு வலது புறத்தில் வந்தவரிடம் கொடுத்தேன். நாங்கள் அதனைத் தோலுடனேயே தின்றோம். என் வாழ்வில் நான் அத்தனை ருசிமிக்க உணவை என்றுமே உண்டதில்லை! அரண் கள் காட்டிலேயே கட்டப்படவிருந்தன. காவலாளி கள் இருமடங்காக்கப்பட்டனர். எங்களிடம் மண்வெட்டிகள் வழங்கப்பட்டன, நான் அவர்களது அரண்களை நாசமாக்கத்தான்

விரும்பினேனே தவிர, அவற்றைக் கட்டி முடிக்க விரும்பவில்லை!

128