பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐரோப்பாவின் தொன்மையான பல்கலைக் கழகங்களில் மற்றொன்றின் மண்டபத்தில் நிகழ்ந்ததும் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. ஷோலகோவின் படைப்புக்களில் தத்து வார்த்தப் பிரச்சினை களுக்கான விடைகளைக் கண்டறியவும், ஒரு மனிதன் தனது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது பற்றிய அறிவுரையைப் பெறவும் வேண்டி 1.மாணவர்கள் அங்கு குழுமியிருந்தனர். அந்த எழுத்தாளர் அங்கு ஆன்மிக வடிவில் தான் பிரசன்னமாகியிருந்தார்; என்றாலும் ஒரு விதத்தில் அந்த இளைஞர்கள் அவரோடு உரையாடினர்; அவரிடம் முறை யிட்டனர்; வாழ்வின் நானாவிதமான முக்கியப் பிரச்சினைகளைப் பற்றிய தமது - விவாதங்களின்போது வெடித்துக் கிளம்பிய உணர்ச்சி வேகம்மிக்க வாதப் பிரதிவாதங்களில் தமக்கு ஆதர வளிக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டனர். இந்த இளம் ஆடவரும் பெண்டிரும் ஜெனாவில், ஸ்லாவோனிக் கல்லூரியில் சந்தித்துப் பேசினர். அவர்கள் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் மிகப் பெரும் பல்கலைக் கழகங்களிலிருந்து, அந்தக் குடியரசு முழுவதிலுமுள்ள மேற் கல்வி நிலையங்கள் மேற்கொண்டு நிறைவேற்றி வந்த பணியைத் தொகுத்துக் காண்பதற்காகக் கூட்டப்பட்டிருந்த ஒரு மாநாட்டில் பங்கெடுப்பதற்காக வந்திருந்தனர். மிக்கேல் ஷோலகோவின் படைப்பில் சோஷலிச எதார்த்தவாதம் என்பதே மா நாட்டின் கருப்பொருளாகும். மண்டபம் நிரம்பி வழிந்த இந்தக் கூட்டத்துக்கு ஓர் இளம் மாணவி தலைமை வகித்தார். மூன்று மாணவர்கள் கூட்டாகச் சேர்ந்து தயாரித்திருந்ததும், மா நாட்டில் பங்கு கொள்ள வந்திருந்தோர் அனைவரிடமும் வினியோகிக்கப்பட்டிருந்ததுமான விவாதத்துக்கு ரிய ஆய்வுரைகளும், மற்றும் இவற்றின் ஆசிரியர்கள் எழுப்பியிருந்த கேள்விகளும் விவாதிக்கப்பட்டன. எல்லா முதுநிலைத் தரங்களைச் சேர்ந்த மாணவர்களும், ஜெர்மன் ஜன நாயகக் குடியரசின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பாண வர் க ளும் பேசினர்; அவர்களில் சிலர் பல முறை பேசினர். விவாதம் உருவாகி வளர வளர, மேலும் மேலும் பல நிகழ்காலப் பிரச்சினைகள் உண்மையில் விவாதத்துக்குள் புகுந்து ஊடாடவே தொடங்கி விட்டன, ஒரு கட்டத்தில் இரண்டு பேச்சாளர்கள் ஒரே சமயத்தில் மேடைமீது தோன்றினர். இந்த இரு மாணவிகளும் பிரதி நிதித்துவப்படுத்திய கோஷ்டியில் - அபிப்பிராயங்கள் மாறு பட்டிருந்தன; எனவே அந்த வேறுபட்ட கருத்தோட்டங்களை எடுத்துரைக்கும் பணி அவர்கள் இருவருக்கு 4ம் வழங்கப்பட்

டிருந்தது.

8