பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது நாட்டின் செல்வம் இந்தப் புதிய நீர் மார்க்கத்தின் வழியே கப்பல்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன. * * வா இயற் ைகயை வெற்றி கொள்வதற்கான இந்தப் பிரம்மாண்ட மான திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்களும், - இதனைக் கண்ணாரக் கண்டவர்களுமான நாம், நாம் கண்டுள்ள வற்றைச் சுருக்கமாக வருணித்துக் கூறுவதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. காலப் போக்கில் இந்த மாபெரும் நிர்மாணத் துக்குத் தகுதியான ஒரு தலைசிறந்த நூலை எழுத்தாளர் ஒருவர் படைக்கவே செய்வார், வ!ால்கா-டான் கால்வாயின் கதை வீரத்தின், துணி வாற்றலின், தியாகத்தின் கதையாகும். இந்த அணையின் மாபெரும் பரிமாணம், இந்தக் கால்வாய், இதன் மதகுகள், மற்றும் இங்குள்ள ஏனைய எல்லாக் கட்டமைப்புக்கள் ஆகிய வற்றின் நிர்மாணத்தில் ஈடுபடுத்தப்பட்ட தூக்கமிழந்த இரவுகளை , பும், அறிவார்ந்த ஆராய்ச்சிகளையும், ஆற்றலையும் எண்ணிப் பார்த்தால்! வால்காமடான் கால்வாய்க்குத் தேவையான கட்டுமான அமைப்புக்களையும் எந்திரங்களையும் உற்பத்தி செய்வதில் நமது பல்-தேசிய இன நாடு முழுவதுமே. தனது ' பங்கை ஆற்றியது; மேலும் இதனை நிர்மாணித்து முடிக்கும் பணியை சோவியத் யூனியனின் எல்லாப் பகுதிகளிலுமிருந்து வந்த மக்களே செய்து முடித்தனர். , - ரஷ்யர்களின் பன்நூற்றாண்டுக் காலக் கனவின் நிறைவேற்ற மாக நாம் வால்கா-டான் கால்வாயைக் குறிப்பிடத் தொடங்கி யுள்ளோர்.. மாமன்னர் பீட்டர் இதனைக் குறித்துச் சிந்தித்தார்; ரஷ்யாவிலிருந்த ஏனைய முற்போக்கான மனம் படைத்த மனிதர் களும் அவ்வாறே சிந்தித்தனர்; ஆயினும் அவர்களது கனவு கள் நிறைவேறவில்லை, மாமன்னர் பீட்டர் கால்வாயைத் தோண்டும் , பணியை மேற்பார்வையிடும். பொறுப்பை வழங்கியிருந்த அஸ்த்ர கானின் கவர்னரான இளவரசர் கோலித்சின் இந்தப் பிரம்மாண்டமான பணியைச் சாதித்து முடிக்கும் சாத்தியப் பாட்டில் நம்பிக்கை இழந்துபோய், ஜார் மன்னருக்கு இவ்வாறு கடிதம் . எழுதினார்: ' ' ' கடவுள் தான் . நதி களின்மீது ஆட்சி செலுத்தி வருகிறார்; , சர்வ வல்லமை படைத்த ... கடவுள் பிரித்து வைத்துள்ள ஒன்றை, , ஒன்றுபடுத்துவது என்பது மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டதாகும். ஆனால் ஒரு காலத்தில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட

தாகவும், காரிய சாத்தியமற்றதாகவும் ' தோற்றிய 'ஒரு

185