பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்ட தமது சொந்த அனுபவத்திலிருந்து எடுத்துக் காட்டிய பல உதாரணங்களின் மூலம் அவர் விளக்கினார். இளம் மக்களுக்கு உரையாற்றுகையில், தமது நோக்கமானது அவர்களுக்கு உபதேசம் செய்வதாக இருக்கவில்லை, மாறாக அவர்கள் தமது சிந்தனையில் என்ன கருதியிருந்தார்கள் என்பதைக் கேட்டறிந்து கொள்வதாகவும், தாம் கண்ட முடிவு களை அவர்களோடு பகிர்ந்து கொள் வதாகவுமே இருந்தது என்பதை அவர் 1.Jல முறை வலியுறுத்தினார், பிரபலமான பல்கேரியக் கவிஞரான லியு மோமிர் லெவ்சேவ் அந்தக் கூட்டத்தில் கூறிய வாசகங்களும் மறக்கொ ணாதவை யாகும்: இந்தக் கூட்டத்தின் மிக முக்கியமான அம்சம் தங்களைச் சந்திப்பது தான். இதுவே அதன் மணியகுடமாகும். உங்களது நூல்கள் கம்யூனிஸ்டுகளின் தலைமுறைகளை, காம்சொமால் உறுப்பினர் களது தலைமுறைகளை, போராளிகளின் தலைமுறை களைப் போஷித்து வளர்த்து வந்துள்ளன ; தொடர்ந்து வளர்த் தும் வருகின்றன. மிக முக்கியமான பல்கேரிய எழுத்தாளர்கள் தமது கலைத் திறனைத் தங்களிடமிருந்தே கற்றுக் கொண்டுள்ளனர். அவர்களிற் சிலர் எங்களது விடுதலைப் போராட்டத்தில் அழிந்து பட்டு விட்டனர்; ஏனையோர் எங்கள் நாட்டில் சோஷலிசத்தைக் கட்டியமைப்பதில் தமது வாழ்க்கை முழுவதையுமே அர்ப் பணித்துள்ளனர்; இன்னும் சிலர் உங்களிடமிருந்து கற்றுக் கொண்டு உழைத்து வருகின்றனர். குருடருக்குப் பார்வையும், போர்வீரன் வெற்றி பெறும் விதத்தில் அவனுக்கு வலிமையை யும் வழங்கும் “ ஆயிரம் மந்திரக் கிணறுகள்' பற்றிய பல்கேரிய இதிகாசக் கதை ஒன்று உண்டு. உங்களைச் சந்திப்பதில், அத்தகைய கிணறுகளில் ஒன்றை நாங்கள் எட்டிப் பிடித்து, அதிலிருந்து எங்களது ' வருங்காலப் படைப்புக்கான வலிமையைப் பெறு வதையே எங்களது நோக்கம்:ாகக் கொண்டிருந்தோம். முக்கியமான பணிகள் எம்மை எதிர் நோக்கியுள்ளன என்பது தெளிவு. அவற்றை நிறைவேற்ற, ஷோலகோவின் உத்வேகம் பெற்ற சத்தியம் , ஷோ லகோவின் திறமை ஆகியவற்றில் ஓரள (வனும்--அது மிகமிகச் சிறிய அளவாயினும் கூ!..-எங்களுக்குத் தேவைப்படும். 1967 ஜூன் - மாதத்தில் சோவியத் யூனியனையும், பிற சே!? ஷலிச நாடுகளையும் சேர்ந்த இளம் எழுத்தாளர்களோடு, ஷோலகோ வ் வெஷென்ஸ்காயாவில் நடத்திய உரையாடல் களும் இதே போன்ற சூழ்நிலையில் தான் நிகழ்ந்தன, தற்கால.

இலக்கியம் பற்றியும், சமுதாய வாழ்க்கையோடு அதற்குள்ள

12