பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் முழுமையான, மேலும் அருமையான ஒலியோடு ஒலிப்பதற்கு அவர் நூலாசிரியருக்கு உதவட்டும். நூலாசிரியர் இந்த உதவிக்கும் கூட நன்றியுடையவராக இருப்பார். மேலும், இவ்வாறு கூறுவதற்குக் காரணம். பழமொழி கூறுவது போல், ஒன்றுமில்லாததைக் காட்டிலும், ஒரு சொறி. பிடித்த ஆட்டிடமிருந்து ஒரு குத்து ரோமத்தைப் பிடுங்குவது மேல் என்பதனால் அல்ல; மாறாக, எழுத்தாளர் களான் நம்மில் மிகப் பெரும்பாலோர் மொழியில் ஒரு செம்மை யான சொல்லாட்சித் திறனை இன்னும் எட்டிப் பிடிக்கவேயில்லை என்பதனால் தான். மேலும், இலக்கியத்துக்கும் நிர்மாணம்பற்றிக் கூறும் அதே வார்த்தை பொருந்தும். அதாவது, எவரும் எதுவும் செய்யாமல், சும்மா நின்று வெறுமனே பார்த்துக் கொன்டிருக்க முடியாது. முக்கியமாக, விமர்சகர்கள் அவ்வாறு இருக்க முடியாது. உங்களுக்குத் தேவையான விஷயஞானம் இல்லாவிட்டால், போங்கள்; போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; அதற்கிடையில், உங்களால் அதிகமாக வேலை செய்ய முடியாது என்றால், செங்கல் களையாவது பொறுக்கிக் கொடுங்கள். இலக்கியக் குப்பைகள் அதிகரித்து விடுவதற்கான பிரதான மான காரணங்களில், நேர்மையான, இதயபூர்வமான, பொறுப்பு மிக்க விமர்சனம் இல்லாமையும் ஒன்றாகும். இந்த அத்தியாவசியமான தன்மைகளை விமர்சகர்கள் நெடுங்காலத்துக்கு முன்பே உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும்; தமது தரக்குறை வான படைப்புக்கு எழுத்தாளர் ஏற்கவேண்டிய பொறுப்பில் ஒரு பகுதியையாவது அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். விமர்சகர்களின் குற்றம் சார்ந்த உடந்தைப் போக்கினால்தான் ஒரு தாக்கு றைவான, நூல், பல பதிப்புக்களாக வெளிவர முடியும்; இதற்கும் மேலாக, அது இலக்கிய உலகில் புதிதாகக் காலடி வைத்துள்ளவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாகப் பயன் பட்டுவிடும். இலக்கியக் குப்பையின் வளர்ச்சிக்கான இரண்டாவது காரணம், ஏப்ரல் 23-ல் எடுக்கப்பட்ட மத்தியக் கமிட்டியின் முடிவுக்குப் பிறகும்கூடத் தொடர்ந்து செழித்து வளரும்

    • கோஷ்டி. * மனப்பான்மையாகும், கலைக்கப்பட்டு விட்ட.

பாட்டாளி வர்க்க எழுத்தாளர்களின் ரஷ்யக் கழகத்தை உதைத்துக் கொண்டே இருப்பதில் எப்போதுமே சளைக்காத பான்ஃபெரோவ், அவரே தலைமை வகித்து இயக்கி வரும் படைப்பாளர் கோஷ்டி விஷயத்தைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்வது, அவருக்கு ஒரு நல்ல யோசனையாக விளங்கக்கூடும், இந்தக் கோ தெடி ஒரு பரஸ்பரப் பாராட்டுக் கழகக் கொள்கையை

221

221