பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிக்குத் தேவையான எல்லா நிலைமைகளும் உருவாக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஒவ்வொரு சோவியத் கட்டிட நிர்மாண ஸ்தாபன மும் பல்வேறு வேலைகளுக்கும் அத்தியாவசிய மான சகல வசதிகளையும் தன் வசம் கொண்டுள்ளது என்பதை எல்லோரும் அறிவோம். அவ்வாறு இருக்கும்போது, சோவியத் இலக்கிய விமர்சகர்கள் உண்மையிலேயே பயன்மிக்க, கா ரி யார்த்தமிக்க பணியைச் செய்யக்கூடிய விதத்தில், அவர்களுக் குத் தேவையான நிலைமைகளை ஏன் வழங்கக் கூடாது? இந்த நெடுங்காலப் பிரச்சினையைத் தீர்த்தாக வேண்டிய காலம் வந்து விட்டது என்று நான் கருதுகிறேன். எனது அபிப்பிராயத்தின் படி, நாடக ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியங்களைக் குறைத்து, அதன் மூலம் மிச்சமாகும் தொகையைக் கொண்டு ஓர் உறுதியான நிதியை விமர்சகர்களுக்காகத் திரட்டி உருவாக் கலாம், ரஷ்ய மொழியிலும் சோவியத் யூனியனது மக்களின் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படும் உக்ரேனிய இலக்கியங் களின் மொழி பெயர்ப்புக்கள் விஷயத்திலும் எல்லாம் நன்றாக இருந்து விடவில்லை. எங்களுக்கு வழங்கப்படும் மொழி பெயர்ப் புக்களில் உக்ரேனியப் பேச்சு வழக்கின் இனிமை இல்லாமற் போய்விடுகிறது. உக்ரேனிய எழுத்தாளர்கள் நமது நாட்டுக்கும் முற்போக் கான மனிதகுலம் அனைத்துக்கும், பல அற்புதமான புதிய நாவல்களை இன்னும் வழங்கி வருவார்கள் என்று உங்கள் எல்லோரையும் போலவே நானும் திடமாகக் கருதுகிறேன். ' இந்த வருகையின்போது நான் கீவையும் அதன் சுற்றுப் புறங்களையும் தான் பார்த்தேன்; ஆனால் ஏனைய உக்ரேனிய நகரங் களையும் நான் சுற்றிப் பார்க்க இயலாமற் போய் விட்டதே என்பது குறித்து எனக்குப் பெரிதும் வருத்தம்தான், என்றாலும் கீவ் நகரம்தான் உக்ரேனின் அச்சாணி என்பதும் உண்மைதான். உக்ரேனிய மக்களின் செழித்தோங்கி வளரும் வாழ்க்கையையும் கலாசாரத்தையும், மற்றும் அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பின்னால் கடந்த முப்பத்தி ஏழு ஆண்டுகளில் அது கடந்து வந்துள்ள மகோன்னதமான மார்க்கத்தையும், அந்நகரம் நிலைக் கண்ணாடியில் பிரதிபலிப்பதுபோல் பிரதிபலித்துக் காட்டுகிறது உக்ரேனே! உனக்கு எனது ஆழ்ந்த மரியாதை வணக்கங்கள். உக்ரேனிய மக்களே! உங்களுக்கு ஆனந்தம் கிட்ட, வாழ்த்து கிறேன், 1954

254

264