பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டறிவதுமே தமது பணியாக இருந்தது என்று அவர் எழுதினார். 1934-ல் அகில-யூனியன் எழுத்தாளர் காங்கிரசுக்கு ஒரு மாதத்துக்குப் பின்னர், ராஸ் தாவ்-ஆன்-டானில் ஆலைத் தொழிலாளர்களும் ரயில்வேத் தொழிலாளர்களும் கூடியிருந்த ஒரு கூட்டத்தில், பாட்டாளி வர்க்க லட்சியத்தின் ஒரு பகுதி என்ற முறையில் இலக்கியம் என்பது பற்றி ஷோலகோவ் ஒரு முக்கியமான உரையை ஆற்றினார், இதனையடுத்து, கூட்டுப்பண்ணை விவசாயியின் ஒட்டுமொத்த மான கல்வித்தரத்தைத் தொழிலாளியின் கல்வித்தரத்துக்கு உயர்த்த வேண்டுமெனக் கோரும் ஒரு கட்டுரையையும், உள் நாட்டு யுத்தத்தின்போது பொதுகுஷ் ' செவ் கா பண்ணை வீட்டையும், அந்தப் பிரதேசத்தில் நிறுவப்பட்ட கூட்டுப் பண்ணையின் மையமாக விளங்கிய அதன் மக்களையும் பற்றிய வீரஞ்செறிந்த கதையைக் கூறும் மற்றொரு கட்டுரையையும், அதன்பின் நிக்கோலாய் ஆஸ்த்ரோவ்ஸ்கி மற்றும் சுலெய்மான் ஸ்தால்ஸ்கி ஆகியோரின் நினைவைப் போற்றும் விதத்தில் எழுதப்பட்ட இரண்டு கட்டுரைகளையும் அவர் எழுதினார். ம ா க் சிம் கார்க்கியின் மரணத்தின்போது ஷோலகோவ் மாணவர்களும் ஆசிரியர்களும் அடங்கிய ஒரு கூட்டத்தில் பேசினார். சுப்ரீம் சோவியத்தின் பிரதிநிதி என்ற முறையில் தாம் ஆற்றிய உரைகளில், தாயகத்தின்பால் கொள்வதில் எது உண்மையான அன்பு, எது போலியான அன்பு என்பதைப் பற்றியும், மனிதர்களை அவர்களது சொல்லைக் கொண்டல்லாமல், அவர்களது செயல்களைக் கொண்டே சோதித்துப் பார்க்கும் வரலாற்றைப் பற்றியும், டான் கோஸாக்குகளின் வாழ்க்கையை யும் சோவியத் தேசபக்தியையும் பற்றியும் ஷோலகோவ் கூறுகிறார். ஏ, எஸ். செராஃபிமோவிச்சின்' எழுபத்தைந்தா வது பிறந்த 1 நாள் விழாவின்போது அவர் எழுதிய பாசமும் மதிப்பும் மிக்க பின்வரும் வாசகங்கள் ஷோவகோவின் மனப்போக்கைப் பெரிதும் சுட்டிக் காட்டக் கூடியவையாகும் : "இளம் எழுத் தாளர்களான நாங்கள் எந்த எழுத்தாளர்களிடமிருந்து கற்றுக் கொண்டோமோ, அந்த எழுத்தாளர்களது பரம்பரையைச் சேர்ந் தவர் செராஃபிமோவிச். ' நான் சொந்த முறையில் அவருக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறேன்; ஏனெனில் எனது இலக்கிய வாழ் வின் தொடக்கத்தில் எனக்கு முதன்முதலில் ஆதரவும் ஊக்கமும்

அளித்து என்னை ஓர்எழுத்தாளனாக அங்கீகரித்தவர் அவரேயாகும்.”

19