பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யெல்லாம் மறந்துவிட்டு, கொஞ்சம் ** ஆதாயம் தேடிக் கொள்ளத் தீர்மானித்து, அந்தப் புகழ்பெற்ற எழுத்தாளரைப் புகழ்ந்து தள்ளவும், சற்றேனும் தகுதியற்ற அளவுக்கு மீறிய புகழ்மாலைகளை அவர்மீது வாரிப் பொழியவும் முற்பட்டனர், மேலும், ஒரு தரக்குறைவான புத்தகத்தை எழுதியதற்காக ஓர் இலக்கிய விற்பன்னருக்குக் கிடைக்கவேண்டிய உரிய மரியாதை யோடு கூடிய, ஒரு முழுமையான, எந்தவிதமான சலுகைகளோ அல்லது கட்டுப்பாடுகளோ காட்டாத, ஒரு விமர்சன ரீதியான சரியான கட்டுரையையேனும், நமது பத்திரிகைகள் என்றேனும் வெளியிட்டதுண்டா? இல்லவே இல்லை. இது ஒரு பரிதாபத்துக் குரிய விஷயம். பாதிக்கப்பட முடியாத உரிமையை அனுபவிக்கும் எந்த நபர் களையும் நாம் கொண்டிருக்கவும் முடியாது; கொண்டிருக்கவும் கூடாது. அத்தகைய கட்டுரைகள் எழுதத்தான் பட்டன என்றும், ஆனால் விமர்சகர்களின் கட்டுப்பாட்டுக்கு மீறிய காரணங்களால் அவை வெளியிடப்படவில்லை என்றும் சிலர் ஆட்சேபித்துக் கூறலாம், உள் நாட்டுப் போர் ஆண்டு களின்போது, தொழி லாளர் விவசாயி கள், " சோவியத் ஆட்சி எங்கள் கைகளில் உள்ளது என்று கூறுவது வழக்கம், இன்று நாமும் இவ்வாறு கூறுவதற்கு நமக்கு எல்லா உரிமையும் உண்டு: சோவியத் இலக்கியம் எங்கள் கைகளில்தான் உள்ளது, மேலும், ரையூரிகோவ் போன்ற பயந்தாங்கொள்ளிப் பிறவிகள் பத்திரிகை களிலும் சஞ்சிகைகளிலும் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக இருக்கிறார்களோ, அவ் வளவுக்கவ்வளவு விட்டுக் கொடுக்காத. துணிவு மிக்க, நமக்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற விமர்சனக் கட்டுரைகளும், அதிக அளவில் வெளிவரும். வாசகர்களின் பொதுஜன அபிப்பிராயத்தை உரு வாக்குமாறு லித்தரத்துர்னவா கெஜத்தா பத்திரிகைக்குப் பணிக்கப்பட் டுள்ளது. இந்தப் பத்திரிகை நமது இலக்கியத்துக்கு ஒரு திறவு கோல்; அதனை ஒரு தலையான விருப்பு-வெறுப்பு இல்லாத முறையில் பரிசயம் செய்து கொள்வதற்கான சாதனம் அது. ஆனால், இலக்கிய விமர்சனத் துறையில் தாம் பெற்றுள்ள இந்தப் பதவி உயர்வுக்காகத் தோழர் சிமனோவுக்குப் பெரிதும் கடன் பட்டுள்ளவரும், தமது போஷகரை ஏதோ சூரியன் போலக் கருதியே அவரைப் பார்ப்பவரும், அந்தக் கண்ணைப் பறிக்கும் ஒளியை ஏறிட்டுப் பார்க்கமாட்டாமல் உண்மையில் தமது கண்களை மூடிக் கொள்பவருமான ஒரு நபரின் தலைமையில், அந்தப் பத்திரிகை இருந்து வரும்போது அது எவ்வாறு ஒரு

தலையான விருப்பு-வெறுப்பற்று இருக்க முடியும்?

269