பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்ச்சிமயமான உச்ச ஸ்தாயிக் குரல்கள் உடனடியாக் அத்தாட்சிமிக்க கனத்த, காத்திரமிக்க குரல்களாக மாறி விடுகின்றன. இதன் பின் அவர்கள் தமது வலிமையையெல்லாம் காட்டி ஆடிப்பா ட்டித் தீர்த்து விடுகிறார்கள்; இத னா ல் ரையூரிகோவும் கூட, வொரோவ்ஸ்கி வீதியிலிருந்து வரும் குரல் தம்மை அதட்டிக் கேட்குமே என்ற அச்சம்கூட இன்றி, அவர் களது கட்டுரைகளை மகிழ்ச்சியோடு அச்சிடவும் செய்வார்; இதன் பின் விமர்சகரும் உண்மையிலேயே தமது ஆத்திரத்தை யெல்லாம் கொட்டித் தீர்த்து, தயவு காட்டும் கே லி வார்த்தை களையும் விஷமத்தனமான நையாண்டிகளையும் பிரயோகிக்கும் தமது திறமையையும் அற்புதமாகக் காட்டித் தீர்த்துவிட முடியும். புகழ் பெற்ற எழுத்தாளர்களுக்கு அப்போதுதான் பூசிவிட்ட வாசனைத் தைலத்துக்கும் களம் கஸ்தூரிகளுக்கும் பதிலாக, விமர்சகர்கள் வேறொரு பாத்திரத்திலிருந்து நறுமணமே இல்லாத வேறொரு திரவத்தை அள்ளி எடுத்து, அதனைப் பரிசு பெறு வதற்குத் தேர்ந்தெடுக்கப்படாத, அதனால் புகழ்பெற்ற எழுத் தாளர்களாக இல்லாத, அந்த அப்பாவிப் பிறவிகளின் தலைமீது தாராளமாகக் கொட்டித் தீர்த்து விடுகின்றனர். சமயங்களில் அந்த அப்பாவிப் பிறவி தமக்குக் கிடைத்த முதல் அடியிலேயே தலை கிறுகிறுத்து மயங்கிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், அடுத்த விமர்சகர் அவரை மீண்டும் தாக்குவதற்காக, அவருக்குப் பின்னால் கையில் தடியோடு அவரை நெருங்கியும் வந்து கொண்டிருப்பார். மேலும், இங்கு பேசிய பலரும், நமது இலக்கியத் தோட்டா உறையைப் பற்றி - நமது ஐந்து அல்லது பத்து தலையாய எழுத்தாளர்களைப் பற்றிப் பேசினார்கள். தோழர்களே, பழைய போர் வீரர்களான நாம் நமது ஆயுதத் தளவாடங்களைச் சரிபார்த்துக் கொள்வதற்கு நேரம் வந்துவிடவில்லையா? தோட்டா உறையிலேயே தோட்டாக்களை நெடுங்காலம் வைத்திருந்தால், அதிலும் முக்கியமாக, மழைக் காலத்தில், அல்லது பனியுருகும் காலம் எனப்படும் சேறும் நீரும் மிக்க பருவத்தில், அவ்வாறு வைத்திருந்தால், அவை நீறிப்போய்த் துருப்பிடித்துப் போய்விடும் என்பதை அறியாதவர்கள் நம்மில் யாரேனும் இருக்க முடியுமா? அப்படியென்றால், நாம் கெட்டுப் போன பழைய தோட்டாக்களை அகற்றிவிட்டு, தோட்டா உறைக்குள் புதிய, கெட்டுப் போகாத தோட்டாக்களை நிரப்பி

  • வெரோவ்ஸ்கி வீதி: இங்குதான் சோவியத் எழுத்தாளர் யூனியனின்

நிர்வாகக் குழு அலுவலகம் உள்ளது,

271