பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஆண்டுகள் சில கழிந்தன; மீண்டும் எழுத்தாளர் ஃபதயேவ் மறைந்து விட்டார்; இலக்கிய நிர்வாகியான ஃபதயேவ் மீண்டும் தோன்றினார், சில சமயங்களில் நாம் உண்மையிலேயே எத்தகைய அற்புதமான மாற்றத்தைக் காண நேர்கிறது! மேலும், இத்தகை.! மாற்றங்கள் நிகழ்ந்து வரும் அந்த அற்புத உலகம் கூப்பிடு தூரத்தில்தான்--வொரோவ்ஸ்கி வீதியில் தான் உள்ளது. இந்த நிர்வாகப் பதவிக்கு நமது கட்சியில் அந்தஸ்தில் குறைந்த ஒரு நடாரைக் கண்டறிந்திருக்க முடியாதா? மேலும், எழுத்தாளர் களது சங்கீதக் கோஷ்டிக்கு ஃபதயேவ் தான் கலை இயக்குநராக இருந்தார் என்று எவரேனும் கூறினால், இதனை நான் இவ்வாறு குறிப்பிட்டால், அதுவும் உண்மையல்ல, ஃபெதின், கிளாத்கோவ், லியானோவ் ஆகியோரோ அல்லது பெரிய எழுத்தாளர்களில் வேறு எவருமோ, நாவல்கள் எழுதுவது எப்படி. என்பது பற்றிய உத்தரவுகளைப் பெறுவதற்காக, ஃபதயேவை அணுகியதில்லை, நம்மில் ஒவ்வொருவரும் அவரவர் தம் சொந்த எழுத்து முறையை, சொந்த உலகப் பார்வையை, சொந்த நடையைப் பெற்றிருக்கிறோம்; கலா பூர்வமான திறமை பற்றிய பிரச்சினை களில், ஃபதயேவ் நமக்கு ஒரு (மறுக்க முடியாத அத்தாட்சியாளராக இருக்க முடியாது; அவ்வாறு அவர் என்றும் இருந்ததும் இல்லை, யாகும் கோலாஸ் , ரைல்ஸ்கி, திச்சினா, துவர் தோவ்ஸ்கி, திக்கனோவ், மார்ஷாக், கிஸோகோவ்ஸ்கி, ஷிச்சி பச்சேவ் ஆகியோரோ அல்லது - ஏனைய பெரிய கவிஞர்களில் எவருமோ, பாடங்களைக் கற்றிக் கொள்ள இப்போது எவ்வாறு சுர்கோவை நாடி - வருவதில்லையோ, அதேபோல் வசன இலக்கிய எழுத்தாளர்களும் ஃபதயேலை நாடிச் செல்லவில்லை, அவர்கள் அனை வரும், சுர்கோவும் கூடத்தான், ஒரு வாத்தியக் கோ ஷ்டியில் மேளங்கள், தாளங்கள், மற்றும் தட்டி. இசை யெழுப்பும் ஏனைய கருவிகள் ஆகியவற்றைத் தவிர, ஏனைய விஷயங்களும் பலவுண்டு என்பதை நன்றாக அறிவர், எனவே சுர்கோவிடமிருந்து அவர்கள் என்ன கற்றறிந்து கொள்ள முடியும்? என்ற லும், கவிஞர்கள், வசன இலக்கிய கர்த்தாக்கள், விமர்சகர்கள், நாடகாசிரியர்கள் ஆகிய எல்லோரும் கார்க்கியை நாடித்தான் சென்றனர்... ஃபதயேவ், - அல்லது சுர்கோவ் போன்ற இலக்கியத் தலைவர்களிடம் அவர்களது தோழர்களில் எவருமே தமது பிரச்சினைகளை என்றுமே கொண்டு வரவில்லை என்றால், அல்லது அவ்வாறு கொண்டுவரும் எண்ணம் எதையும் கொண்டிருக்கவும் இல்லையென்றால் அத்தகைய தலைவர்கள்தான் நமக்கு எதற்கு' என்று எவரும் கேட்க மாட்டார்களா? ..

2 38

298