பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதாரணமாக, ஷோலகோல் அல்லது சிமனோவ் நமது யூனியனின் தலைவராக இருந்தால், நிலைமைகள் வேறுவிதமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக இருக்காது. எல்லாம் அப்படி அப்படியேதான் இருந்து வரும். நமது எழுத் தாளர்களும் அதனால் எவ்விதத்திலும் மேம்பட்டுவிட மாட்டார்கள், - அளவுக்கு மீறிய கூட்டங்களின் சந்தடியிலிருந்தும் தொல்லை களிலிருந்தும், எழுத்தாளர்களின் சிந்தனையைப் புத்தகங்கள் எழுதும் அவர்களது பிரதான வேலையிலிருந்து பறித்துக் கொண்டு விடும் எல்லாவற்றிலிருந்தும், எழுத்தாளர்களை விடுவிப்பது அத்தியாவசியமாகும். இப்போதுள்ள நிலைமையில் நாம் மிகவும் இரங்கத்தக்க நிலையிலேயே இருக்கிறோம், ஏனெனில் லியானோவ், திக்கனோவ், ஃபெதின் போன்ற பெரும் திறமையாளர்களும் பிறரும், தமது மதிப்பிடற்கரிய நேரத்தில் மிகப் பெரும் பகுதியைச் சகலவிதமான கூட்டங்களிலும் கலந்து கொள்வதன் மூலமே வீணடித்து விட்டனர்; இதற்குப் பதிலாக, அவர்கள் வாழ்க்கையை ஆராயவும் எழுதவும் கூடிய விதத்தில், இதிலிருந்து விடுபட்டவர்களாக இருந்திருக்க வேண்டும். இதற்கு நாம் முடிவு கட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது. வாசகர்கள் நாம் அவர்களுக்குப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்று விரும்புகிறார்களே தவிர, கூட்டங்களில் ஆற்றும் உரைகளை அல்ல. வாழ்க்கையோடு நேரடியாகத் தொடர்பு கொள்ள எழுத்தாளர்களுக்கு உதவ வேண்டியது அத்தியாவசியம்; அவர்கள் வாழ்க்கையின்பால் முழுக்க முழுக்க நேர்முகமாகத் திரும்பியாக வேண்டும். இதனைச் செய்வதற்கு எந்தப் பிரத்தியோகத் தீர்மானங்களையும் நிறைவேற்ற வேண்டிய தில்லை . எழுத்தாளர்கள் ஒவ்வொருவரோடும் பேசுவதன் மூலம், அவர்களது விருப்பங்களை நிர்ணயிக்க வேண்டும் என்று யூனிய னிடம் கேட்டுக் கொள்வதே எளிதாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன். என்னதான் இருந் தாலும், - நிச்சயமாக அவர்கள் எல்லோருமே ஒரு மாற்றத்துக்காக வெளியே செல்ல என்றுமே துணியாமல், பெரிய நகரங்களிலேயே வசித்து வர விரும்புகிறார்கள் என்று சொல்ல முடியுமா என்ன? கூட்டுப் பண்ணை அல்லது அரசாங்கப் பண்ணையைக் களமாகக் கொண்ட நாவல்களை எழுதச் சற்று மும்முரமாக ஈடுபட வேண்டும் என்று விரும்பும் எழுத்தாளர்களை, அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்த வொரு கிராமப்புறத்துக்கேனும், மூன்று அல்லது நான்கு

298

299