பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டுகள் அவர்கள் போய் இருந்து விட்டு வருவதற்கு, நாம் ஏன் உதவக் கூடாது? அவர்கள் வசிப்பதற்கு அங்கு நாம் வீடுகளும் கட்டிக் கொடுக்கலாம்; அதில் அமர்ந்து அவர்கள் தமது இதயம் நிறைவு காணும் விதத்தில் எழுதித் தள்ள முடியுமே, அவர்கள் தாம் விரும்பும் எந்தச் சமயத்திலும் மாஸ்கோவுக்கோ, மின்ஸ்க்குக்கோ, அவுக்கோ அல்லது தாம் விட்டுச் சென்ற எந்தவொரு நகருக்கே" வர:38 7ம் என்பதையும், என்றாலும் அவர்கள் பெரும்பகுதி நேரத்தில் தமது வருங்கால் நாவல்களின் கதாநாயகர்கள் (மத்தியிலேயே வாழ்ந்து வரு வார்கள் என்பதையும், இதுவே வெற்றிக்கு ஓர் உத்தரவாதமாக விளங்கும் என்பதையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை, நாம் இஞ்சினீயர்களுக்கும் தொழில் நுட்ப நிபுணர்களுக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கிறோம், இல்லையா? எனவே, இதே காரியத்தை நாம் ஏன் எழுத்தாளர்களுக்கும் செய்து கொடுக்கக் கூடாது? இதைப்பற்றி நான் கூறுவதற்குக் காரணம், உண்மையில் ஓர் எழுத்தாளர் புரியும் வேலை, ஒரு வீட்டுக் கைத்தொழில் என்டர் தால்தான். அவர் விஷயங்களைச் சேகரிக்கும் வேட்டைக்காக வெளியே போகாத சமயங்களில், வீட்டுக்குள்ளே மேஜை முன் அட்டிர்ந்து எழுதிக் கொண்டிருப்பார்; மேலும் அவரது வேலை58) யச் சாதாரண வேலை நாளின் 1. பணிக்கணக்கில் கணக்கிட முடியாது. எனவே தான் ஒரு கூட்டுக் குடித்தனம் பகுதியில், உதாரணமாக ஓர் அரசாங்கப் பண்ணையின் கூட்டுக் குடித்தனப் பகுதியில், அவர் வசிப்பது என்ற கருத்து முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். சமையலறையில் இரைந்து கொண்டிருக்கும் ஒரேயொரு மண்ணெ லாணெய் ஸ்ட. வ் அடுப்பும், ஒரே ஒரு மனைவியும் -அவள் பெரிய வாயாடியாக இருந்தாலும் கூட..- மட்டும் வீட்டில் இருந்தால் நல்லது; ஏனெனில் த எனக்குத் தேவையான அமைதியைப் பெறுவதற்குக் கண வனுக்கு ஒரு போராடும் சந்தர்ப்பமாவது கிட்டும்; ஆனால், சமை(4.சலறையில் எட்டு மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்புக்கள் இரைந்து கொண் டிருந்தால், எட்டுப் பெண்கள் ஒன்று கூ ட்டி. ஒருவரையொருவர் பேச்சில் மிஞ்சும் காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தால், அது முற்றிலும் வேறு விஷயம். அத்தகைய இடத்தில் வேலை பார்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த முயற்சியில் ஈடுபடத் தீர்மானிக்கும் எழுத்தாளர்கள் இந்தக் காரியத்தை மிகவும் கரிசனத்தோடு கருத்தில் கொள்ள வேண்டும்; தமது மனைவி, குழந்தைகள், தமது தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாவற்றோடும், தமது வீடு முழுவதையுமே காலி செய்து அங்கு செல்ல வேண்டும். இது ஒன்றும் டைப்.1{rக்கப்

300

300