பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L/Lண ம்' அல்ல. அவர்கள் தமது வேலைக்குத் தேவைப்படும் விதத்தில் இங்கும் அங்குமாகப் பயணம் செய்யக் கூடியவாறு அவர்களுக்குக் கார்கள் வாங்கிக் கொடுத்து உதவுவதும்கூட நல்லதொரு யோசனையேயாகும்; இதன் மூலம் அவர்கள் நடு ரோட்டில் நின்று கொண்டு, ஏனைய கார்களைக் கை காட்டி நிறுத்த வேண்டிய சிரமத்திலிருந்தும், அல்லது உள்ளுர் எந்திர மற்றும் டிராக்டர் நிலையத்தின் - டைரக்டர், வட்டாரக் கட்சிக் , கமிட்டியின் செயலாளர் அல்லது பிராந்திய சோவியத்தின் தலைவர் ஆகியோரது தயவை என்றென்றும் சார்ந்திருக்கும் நிலை யிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். எல்லா எழுத்தாளர்களுமே கிராமங்க ளுக்குக் குடிபெயர்ந்து விட வேண்டியதில்லை என்பதும் உண்மைதான். கூட்டுப் பண்ணை வாழ்க்கையைப் பற்றி நேர்முகமாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் மட்டுமே போனால் போதும், தொழிலாளி வர்க்கத்தை அல்லது நகர்ப்புற அறிவுத் துறையினரைப் பற்றி எழுதத் திட்டமிடும் எழுத்தாளர்களுக்கு சோவியத் யூனியனி லுள்ள எந்தவொரு தொழில் துறை நகரத்திலோ அல்லது பிற நகரத்திலோ வரவேற்பு உண்டு. கட்சி உறுப்பினரான எழுத்தாளர் ஒருவர், தாம் தேர்ந் தெடுத்துச் சென்ற கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்த வுடனே , அங்குள்ள உள் ளூர்க் கட்சி ஸ்தாபனத்தில் சேர்ந்து விட வேண்டும்; மேலும் அவர் தமது பிரதானமான வேலைக்குக் குந்தகம் ஏற்படாத விதத்தில் அங்கும் ஏதாவதொரு பயன்மிக்க பணியை ஆற்றி வரவும் முடியும். கட்சி உறுப் பினரல்லாத எழுத்தாளரும் சில பொதுஜனக் கடமைகளை ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டார். எழுத வேண்டிய விஷயங்களைப் பொறுத்த வரை, அங்கு அ65வ அவருக்கு ஏராளமாகவே கிடைக்கும். நம்மைச் சுற்றிலும் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது: என்பதைக் கூர்மையாகப் பார்த்து அதனைக் கிரகித்துக் கொண்டால் போதும்! ஓர் எழுத்தாளர் மக்களின் வாழ்க்கையையே தாமும் உண்மையாக வாழும்போது, அவர் களது துயரங்களோடு வருந்தி, அவர்களது இன்பங்களோடு சேர்ந்து மகிழ்ந்து, அவர்களது அக்கறைகளிலும் தேவைகளிலும் தாமும் சொந்த முறையில் சம்பந்தப்பட்டிருக்கும் உணர்ச்சியை யும் பெற்று உணரும்போது, அவர் எழுதும் புத்தகம் ஓர் உண்மை யான புத்தகமாக, வாசகர்களின் இதயங்களைத் தொடு கின்ற புத்த சுடமாக இருக்கும்.

301

301