பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நடப்புத்தன்மை மிக்கதாகும்; அது இல்லாவிட்டால், புத்த ஆண்டுகளின்போது ஷோலகோள் உலக நடப்புப்பற்றி - - எழுதிய எழுத்துக்களின் தொ கு தி முழுமையற்றதாகவே தோன்றும். ' பகைமையின் விஞ்ஞானம் *' இல் ல ா ம ல் அத்தகையதொரு தொகுதியை எண்ணிப் பார்ப்பது என்பதே மிகவும் சிரமம்தான்). 1 பென்சில்களையும், நோட்டுப் புத்தங்களையும், சிறு எந்திரத் துப்பாக்கிகளையும் தாங்கிய ஆயுதபாணிகளாக நாங்கள் முன் என ணிக்கு ஒரு காரில் சென்றோம்.,* - யுத்த நிருபர் என்ற முறையில் ஷோலகோவ் எழுதிய நடைச் சித்திரங்களில் ஒன்று இவ்வாறு தொடங்குகிறது. போரின் இரண்டாம் ஆண்டு முடிவு வாக்கில், தாம் எழுதிய அமெரிக்க நண்பர்களுக்கு ஒரு கடிதம்" என்ற கடிதத்தில், அவர் இவ்வாறு எழுதுகிறார்: 4 யுத்த நிருபர் என்ற முறையில் நான் தெற்கு, தென்மேற்கு, மேற்குப் போர் முனைகளில் இருந்திருக்கிறேன். ஷோலகோவின் உலக நடப்புப் பற்றிய படைப்புகளில் இந்தக் கடிதம்" பெரும் முக்கியத் துவம் வாய்ந்த ஸ்தானத்தை வகிக்கிறது. அதில் 21வர்கள் தமது நாட்டுக்காகப் போராடினார்கள் என்ற தலைப்பில் மாபெரும் தேச பக்தப் போரைப்பற்றித் தாம் ஒரு நாவல் எழுதிக் கொண் டிருப்பதாகவும், அதில் ஜெர்மன் நாஜிப் படையெடுப்புக்கு எதிரான தமது போராட்டத்தில் சோவியத் மக்களின் மீது விழுந்து விட்ட சுமையைத் தாம் வருணிக்க விரும்புவதாகவும், தமது அமெரிக்க வாசகர்களுக்கு அவர் கூறுகிறார்; இதற்கிடையில், அந்த நாவல் இன்னும் பூர்த்தியடையாத நிலையில், - ஓர் எழுத்தாளன் என்ற முறையிலல்லாமல், வெறுமனே நேச நாடுகள் ஒன்றின் பிரஜை என்ற முறையில், தமது அமெரிக்க நண்பர்களோடு தாம் பேச விரும்புவதாக அவர் கூறுகிறார், இன்றைக்கு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் அதற்குள் நெடுங்காலத்துக்கு முன்பே மறைந்து போய் விட்ட ஒரு காட்சியுண்மையாகிவிடும்-யுத்தத்தின் இயல்பைப் பற்றி ஆராயும் சரித்திர ஆசிரியர்கள், ஒரு நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் . ஒருவர் மற்றொரு நாட்டுமக்களை நோக்கி, உண்மையிலும் சரி, உருவக ரீதியிலும் சரி, ஒரு மகா சமுத் திரத்துக்கு அப்பால் சென்று ஒலிக்கும் விதத்தில் கூறிய வாசகங்களைப் படித்துப் பார்க்கும்போது இப்போது நமக்கு ஏற்படுவதைப் போலவே, அவர்களும் தமது தொண்டையில் ஏதோ ஒன்று எழுந்து அதனை அடைப்பதுபோல் உணரவே செய்வார். ஷோலகோவ் இவ்வாறு எழுதினார்: ஒரு நாடு மற்றொரு

நாட்டை முற்றிலும் துடைத்தெறியவும் அல்லது லிழுங்கித்

24