பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்கள் வீட்டு வாசற்படியில் நீங்கள் இன்னும் கண்டதில்லை. நான் கண்டிருக்கிறேன்; எனவே இத்தனை பட்டவர்த்தனமாக உங்களிடம் பேசும் உரிமையை நான் பெற்றிருக்கிறேன். - எழுத்தாளர் ஓல் கா பெர்கோல்ட்ஸ், வரலாற்றுக்கு---- எங்களது மக்களின் வரலாற்றுக்கு, இலக்கியத்தின் வரலாற்றுக்கு, இறுதியாக மனித குலத்தின் வரலாற்றுக்கு ---ஒரு விஷயத்தைப் பாதுகாத்துக் கொடுத்திருக்கிறார்; அதாவது முற்றுகை நாட் களின்போது வீரத் திருநகரான லெனின்கிராடு நகரின் புத்திர புத்திரிகளுக்கு ஷோலகோவ் வானொலி மூலம் ஆற்றிய ஒரு சிறு உரையைப் பாதுகாத்துத் தந்திருக்கிறார். அது வருமாறு:

    • எனது லெனின்கிராடுத் தோழர்களே! எதிரி சுற்றி

வளைத்துக் கொண் டிருக்கும் சமயத்தில், வாழ்வதும், உழைப் ப தும், போராடுவதும் உங்களுக்கு எத்தனை சிரமமயமானதாக இருக்கும் என்பதை நான் அறிவேன். மக்கள் எங்கணும் ஒவ்வொரு ' போர் முனையிலும், பின்னணியிலும் உங்களை நினைவில் வைத்துள்ளனர். தூரா தொலையிலுள்ள யூரல்ஸில் உருகி வழிந்தோடும் உலோகப் பிரவாகத்தைப் பார்த்துக் கொண் டிருக்கும் உருக்குத் தொழிலாளி உங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறார்; உங்களது விடுதலை கிட்டும் நேரத்தைத் துரிதப் படுத்துவதற்காக, அவர் அயர்வு சோர்வின்றி உழைக்கிறார்; டான்பாஸில் ஜெர்மன் படையெடுப்பாளர்களோடு போரிட்டுக்

ெகாண்டிருக்கும் போர்முனையிலுள்ள போர்வீரர், படு நாசமாக்

கப்பட்ட தமது சொந்த உக்ரேனுக்காக மட்டுமல்லாமல், லெனின்கிராடு வாசிகளான உங்கள்மீது எதிரி சுமத்தி விட்ட மாபெரும் துயரங்களுக்காகவும், அவர்களை அடித்து வீழ்த்தி வருகிறார்...... முற்றுகை வலை யம் உடைபடும் அந்த நேரத்தை , மாபெரும் சோவியத் நாடு லெனின்கிராடு நகரின்-நிரந்தரக் கீர்த்தியில் நீராடியநகரின்--வீரஞ் செறிந்த புத்திர புத்திரிகளைத் தன் மார்போடு சேர்த்தணைக்கும் அந்த நேரத்தை, நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம். 1945 மே மாதம் 13ஆம் தேதியன்று பிராவ்தா வரலாறு , என்றுமே கண்டறியாத அத்தகைய வெற்றி என்ற தலைப்புக் கொண்ட ஒரு கட்டுரையை வெளியிட்டது. உலக வரலாற்றில், இப்போது முடிவுற்ற போரைப் போன்ற அத்தனை ரத்த பயங்கரமான, படு நாசகரமான ஓர் யுத்தம் எப்போதுமே நடந்தது இல்லை என்றால், பின்னர் சோவியத் ராணுவம் பெற்றுள்ளதைப்போன்ற அத்தனை அற்புதமான வெற்றிகளையும் எந்தவொரு ராணுவமும் என்றும் பெற்ற தில்லை என்பதும்

    • கீர்த்தி, வலிமை, மகத்துவம் ஆகியவற்றின் இத்தகையதொரு

26