பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷயம்தான் ; என்றாலும், கட்சியாலும் மக்களாலும் பேணி வளர்க்கப்பட்டுள்ள சோவியத் அறிவாளிகளான நாம் ஒவ்வொரு வரும், நமது மக்களின், நமது கட்சியின், நமது சொந்த சோவியத் ஆட்சியின், சிரமமயமான, அரை நூற்றாண்டுக்காலப் போராட்டத்தின் மூலம் ஆதாயமாகப் பெற்றுள்ள அனைத்தை யும், பதிலுக்கு மிகுந்த அக்கறையோடும், மகன் தந்தையால் காட்டும் அன்போடும் மதித்து நடந்து வருவது நமது கடமை யில்லையா? எனது சொந்த தனிப்பட்ட அபிப்பிராயத்தைக் கேட்டால், அறிவுத் துறையினரின் பிரச்சினை நமது நாட்டில் மிக மிக எளிதாகத் தீர்க்கப்பட்டு விடுகிறது என்றே நான் கூறுவேன், அதாவது வெறுமனே லெனினது கட்சியின் விசு வாசமிக்க போர் வீரனாக இருந்து வாருங்கள்; நீங்கள் ஒரு கம்யூனிஸ்டாயினும் அல்லது கட்சி உறுப் பினர் அல்லாத நபராயினும், உங்களது சகலத்தையும், உங்களது பலம் அனைத்தையும், உங்களது ஆன்மாவையும் 'மக்களுக்கே வழங்கி விடுங்கள்; மக்களது வாழ்வில், அவர்களது இன்பங்களை ..ம் சிரமங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் இதுவே * ' பிரச்சினைக்கு முடிவு கட்டி விடும். நாம் இங்கு, மாஸ்கோவில், சில நாட்களை ஒன்றாகச் சேர்த்து கழிக்க வேண்டியிருக்கும். நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்ற வேண்டியிருக்கும்; நாம் கடினமாகப் பணியாற்றவும் வேண்டும், மேலும், சோவியத் இலக்கியத்தின் நன்மைக்காக இந்தச் சில நாட்களை மிக வும் பயன்மிக்க முறையில் பயன் படுத்திக் கொள்வதற்காக, நாம் சோதரப் போர் வீரர்கள் நடந்து கொள்ள வேண்டியதைப்போல், நல்லெண்ணத்தோடு பாடுபடவும், எல்லா அற்பமான வேதனைகளையும் மனஸ்தாபங் களையும் மறக்க முயலவும் வேண்டும். நம் அனைவரையும் ஒன்று L.டுத்துகின்ற விஷயத்தைப் பற்றிய நமது மாபெரும் சோவியத் இலக்கியத்தை மேலும் முன்னேற்றுவதற்கான நமது கவலையைப் பற்றிய-எண்ணமே நமது மனத்தில் மேலோங்கி நிற்கு மாறு நாம் பார்த்துக் கொள்வோம். கட்சியும் நாடு முழுவதும் நம்மிடம் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண் டிருக்கின்றன, நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நிச்சயமாகக் கருதுகிறேன்: நீங்கள் , ஒருவருக்கொருவர் மற்றவர் மீது தாவிக் கழுத்தைக் கட்டி அரவணைத்துக்கொண்டு, எல்லாத் தவறுகளையும் மன்னித்துவிட வே ண்டும் என்று நான் உங்களிடம் கோரவில்லை. நேயபாவ மெல்லாம் மிகவும் நல்லதுதான்; என்றாலும் நமது இலக்கியத் தொழிலில், நமது சித்தாந்தப் பணியில், கோட்பாடுகளும் 3:36