பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனைவருக்கும், பல்வேறு நாடுகளில் வசித்து வரும் நமது சம் காலத்தவர் அனைவருக்கும், நான் வாழ்த்துக் கூறுகிறேன், மேலும் நான் எனக்கு நானே விரும்பிக் கூறிக் கொள்ளக் கூடிய தலைசிறந்த விஷயம், நான் எனது வாசகர்களுக்கு வாக்களித்துள்ளபடி, அவர்கள் தமது நாட்டுக்காகப் போராடினார்கள் என்ற எனது நாவலின் முதற் பாகத்தை நான் எழுதி . முடிக்க வேண்டும் என்பது தான். இந்தப் பாகத்தை எழுதி . முடிப்பது அரைக் கிணறு தாண்டிய கதைதான். ஏனெனில், இரண்டாவது பாகத்தையும் எழுத வேண்டியுள்ளது.', "" - இந்தப் பத்திரிகையின் வாயிலாக நான் பிராவ்தா. வாசகர் களோடு விரைவிலேயே தொடர்பு கொள்வேன் என நம்புகிறேன். ' ஜனவரி 1, 1966 லீப்சிக்கிலுள்ள காரல் மார்க்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய தத்துவவியலில் டாக்டர் என்ற கெளரவப் பட்டத்தின் சான்றிதழைப் பெற்றுக் கொண்டபோது ஆற்றிய உரை அன்பார்ந்த தோழர். புரூனிங் அவர்களே, அன்பார்ந்த தோழர் ஹோக்செல் ஷினீடர் அவர்களே, லீப்சிக் பல்கலைக் கழகத்தின் மொழியியல் பிரிவின் பேரவைக் கவுன்சிலுக்கு எனது இதய பூர்வமான நன்றியைத் தெரிவிக்கு மாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன். ஒரு முதலாளித்துவ நாடு எனக்கு வழங்கிய ஒரு கெளரவப் பட்டத்தையும், ஒரு சோதர சோஷலிச நாட்டிலிருந்து வரும் அதனை யொத்த ஒரு பட்டத்தையும் பற்றி நான் வேறுவிதமாகத் தான் உணர்கிறேன் என்பதை தான் கூறியாக வேண்டும், முதல் 7 வது பட்டமானது வெறுமனே எனது இலக்கியத் திறமைக்கும், இலக்கியத் துறையில் நான் சாதித்த சாதனை களுக்கும் கிட்டிய ஒரு சான்றிதழ் மட்டுமேயாகும். இரண்டாவது பட்ட விஷயமோ முற்றிலும் வேறானது: இந்தப் பல்கலைக்கழகப் பட்டமானது, நான் கொண்டுள்ள அதே அரசியல் கருத்துக் களைக் கொண்டுள்ள, எங்களது சோவியத் மக்களைப் போலவே அதே குறிக்கோள்களை நோக்கியும், ஒரே லட்சியங்க ளுக் காகவும் பாடுபட்டு வருகின்ற மக்கள் - எனக்களித்த பட்டமாகும். அவர்களது அங்கீகாரம் எனக்கு அளவிடற்கரிய விதத்தில் மிகவும் மதிப்புமிக்கதாகும்.