பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரிவான மதிப்பீட்டை வழங்கியது. இந்த மதிப்பீட்டை நாம் தங்குதடைகள் ஏதுமின்றி அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். நமது இலக்கியத் தொழிலில் நிலைமைகள் எவ்வாறு உள்ளன? பொதுஜன ஏளனத்துக்கே தகுதியான எழுத்தாளர் களைப்பற்றி நாம் பேசவேண்டாம், வெறுத்தொதுக்கும் நபர்களைப் பற்றி எவரும் பேசுவதில்லை. அப்படிப் பேசினால் அது அவரது கெளரவத்துக்கு இழுக் க ாகு ம், நமது நல்ல கவனத்துக்குத் தகுதி வாய்ந்த எழுத்தாளர் களைப்பற்றி நாம் பேசுவோம். காரியார்த்தமாகப் பேசுவோம், அண்மையில் நடந்த நகரக் கட்சி மாநாட்டில் பேசிய மாஸ்கோ எழுத்தாளர் ஸ்தாபனத்தின் செயலாளர் செர்கி நரோவ்சதோவ், நமது மத்தியில் துப்பாக்கிப்படை வீரர்கள் அதிகமான அளவில் இல்லை யென்றும், ஆயினும் இலக்கைச் சரியாகக் குறிபார்த்துச் சுடும் வொரோஷிலோவ் துப்பாக்கிப் பிரயோக நிபுணர்கள் பலர் இருப்பதாகவும், அவர்களே ஸ்தாபனத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றனர் என்றும் கூறினார். அவரது மிகவும் பொருத்த மான, கவிதாபூர்வமான ஒப்பு நோக்கின் சுமாரான அர்த்தம் இதுதான், என்றாலும் நரோவ்சதோவ் சொல்லாமல் விட்டு விட்டது என்னவெனில், துப்பாக்கிப் பிரயோகத்தில் நிபுணர்கள் எனப்படுவோர் மத்தியிலும் இலக்கின் நடுமையத்தை விட்டு விடுங்கள் என்றுமே இலக்கில் தவறாமல் சுட்டறியாத நபர் களும் பலர் இருக்கிறார்கள் என்பது தான். இவ்வாறு சுடப்படும் தோட்டாக்களை, தோட்டா பால் குடிக்கப் போய் விட்டது என்று போர்வீரர்கள் கேலியாகச் சொல்வார்கள். உண்மையில் இலக்கியத் துப்பாக்கிப் பயிற்சிக் களத்திலும் விசித்திரமான காரியங்கள் நிகழத்தான் செய்கின்றன : இங்கோ இலக்கைச் சென்று தாக்கத் தவறிய தோட்டா, அவ்வாறு சரியாகச் சுடத் தெரியாதவரிடமே, சுவரில் அடித்த பந்துபோல் திரும்பி வருகிறது; ஆனால் அது அவரைத் தாக்குவதில்லை; மாறாக, அவருக்கு அது பாலைக் கொண்டு வந்து தராவிட்டாலும், அவரது சிறுபிள்ளைகளுக்கான பாலுக்காக, நூலாசிரியரான அவருக்கு ஒரு கொழுத்த சன்மானத்தை உண்மையில் கொண்டு வந்தே சேர்க்கிறது, இவ்வாறு சரியாகச் சுடத் தெரியாத நபர்கள் குறைவாகச் சுட்டாலும், ஓடுகிற ஓட்டத்திலேயே சுடாமல் இருந்தாலும், நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காது. இதனால் விலையுயர்ந்த தோட்டாக்கள் எவ்வளவோ வீணாகி விடுகின்றன; சில சமயங்களில் ஏற்படும் இழப்பும்- முதலாவதாக நமது வாசகர்கள் ஏற்றுக் கொள்ளும் இழப்பும் - மிகவும் கணிசமான